தைவான் விவகாரம்: சீனா-அமெரிக்க அதிபர்கள் நவ.15இல் ஆலோசனை 
உலகம்

தைவான் விவகாரம்: சீனா-அமெரிக்க அதிபர்கள் நவ.15இல் ஆலோசனை

தைவான்-சீனா இடையேயான மோதல் நீடித்து வரும் நிலையில் சீன அதிபரும் அமெரிக்க அதிபரும் நவம்பர் 15ஆம் தேதி காணொலி வாயிலாக ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

DIN

தைவான்-சீனா இடையேயான மோதல் நீடித்து வரும் நிலையில் சீன அதிபரும் அமெரிக்க அதிபரும் நவம்பர் 15ஆம் தேதி காணொலி வாயிலாக ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. 

தைவான் எல்லைப் பகுதிகளுக்குள் சீன அரசு இதுவரை இல்லாத அளவு தங்களது போர் விமானங்கள் மூலம் ஊடுருவி வருவதாக செய்திகள் வெளியாகி வருகின்றன. சீனாவின் இந்த நடவடிக்கை, கடந்த 72 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு மிகவும் மோசமான பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளதாக தைவான் அதிபா் சாய் இங்-வென் குற்றம்சாட்டி வருகிறார்.

தைவான்-சீனா இடையேயான இந்த பிரச்னையில் அமெரிக்காவும் ஆர்வம் காட்டி வருவது சர்வதேச அரங்கில் கூடுதல் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் நவம்பர் 15ஆம் தேதி காணொலி வாயிலாக நடைபெற உள்ள ஆலோசனைக் கூட்டத்தில் சீன அதிபர் ஜீ ஜின்பிங்கும், அமெரிக்க அதிபர் ஜோ பைடனும் கலந்துகொள்ள உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தக் கூட்டத்தில் தைவான் விவகாரங்கள் உள்ளிட்ட பல்வேறு சர்வதேச விவகாரங்கள் குறித்து ஆலோசிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜாய் கிரிசில்டா குழந்தைக்கு நான்தான் தந்தை!! ஒப்புக்கொண்ட மாதம்பட்டி ரங்கராஜ்

பாரதியின் காளி

கிட்னி முறைகேடு: அரசு வழக்கறிஞர் முறையாக வாதிடவில்லை! - இபிஎஸ் குற்றச்சாட்டு

உலகப் புகழ்பெற்ற நாட்டுப்புறவியல் கட்டுரைகள்

சுவிஸ் தமிழ் எழுத்தாளர்கள் (தொகுதி 1)

SCROLL FOR NEXT