பொருளாதார நெருக்கடி காரணமாக கரோனா பரவலால் விதிக்கப்பட்ட பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளைத் தளர்த்தி இலங்கை அரசு அறிவித்துள்ளது.
இலங்கையில் அதிகரித்து வந்த டெல்டா வகை கரோனா வைரஸ் பரவல் காரணமாக கடந்த ஆகஸ்ட் 20ஆம் தேதி நாடு தழுவிய பொதுமுடக்கத்தை அந்நாட்டு அரசு அறிவித்தது.
இதையும் படிக்க | 18 மாதங்களுக்கு பிறகு எல்லை கட்டுப்பாடுகளை தளர்த்தும் ஆஸ்திரேலியா
அதனைத் தொடர்ந்து 3 முறை நீட்டிக்கப்பட்ட பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளானது தற்போது முடிவுக்கு வந்துள்ளது.
பொதுமுடக்கக் கட்டுப்பாடுகளால் மக்கள் தங்கள் அன்றாட வாழ்க்கையில் சந்தித்து வரும் பொருளாதார நெருக்கடிகளை கருத்தில்கொண்டு புதிய தளர்வுகளை அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. அதன்படி மக்கள் தங்கள் பணியிடங்களுக்கு செல்லவும், அத்தியாவசிய பணிகளில் ஈடுபடவும் அனுமதியளிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிக்க | கோவிஷீல்ட் தடுப்பூசிக்கு அங்கீகாரம் வழங்கியது ஆஸ்திரேலியா!
அதேசமயம் மக்கள் பொது இடங்களில் கூட்டமாகக் கூடவும், பூங்காக்கள், திரையரங்குகள், உணவு விடுதிகள் உள்ளிட்டவைகளுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது. இலங்கையில் இதுவரை 5,16,000 பேர் கரோனாவால் பாதிக்கப்பட்டும் அவர்களில் 12,847 பேர் சிகிச்சை பலனளிகாமல் பலியாகியும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.