உலகம்

2021 அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிப்பு

DIN

2021 ஆம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு இருவருக்கு பகிர்ந்தளிக்கப்படுவதாக நோபல் தேர்வுக்குழு அறிவித்துள்ளது. 

பிலிப்பைன்ஸ் பத்திரிகையாளர் மரியா ரெசா, ரஷ்ய பத்திரிகையாளர் டிமிட்ரி முரடோவ் ஆகிய இருவருக்கும் பகிர்ந்தளிக்கப்படுவதாக நார்வே நோபல் தேர்வுக்குழு அறிவித்துள்ளது. 

அமைதிக்காகவும் ஜனநாயகத்தின் கருத்துச் சுதந்திரத்தை பாதுகாக்கும் முயற்சிகளுக்காகவும் இவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

முன்னதாக, மருத்துவம், இயற்பியல், வேதியியல், பொருளாதாரம், அமைதி, இலக்கியம் ஆகிய துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு ஒவ்வொரு ஆண்டும் நோபல் பரிசு வழங்கப்பட்டு வருகிறது. அமைதிக்கான நோபல் பரிசு நார்வேயிலும், பிற துறைகளுக்கான நோபல் பரிசு ஸ்வீடன் தலைநகர் ஸ்டோக்ஹோமிலும் அறிவிக்கப்படுகிறது. 

இந்நிலையில், 2021 ஆம் ஆண்டிற்கான நோபல் பரிசுகள் அக்.5, திங்கள்கிழமை முதல் தொடங்கி அறிவிக்கப்பட்டு வருகின்றன. மருத்துவம், இயற்பியல் மற்றும் இலக்கியத்துக்கு நடப்பாண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டுவிட்டன. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT