டோக்கியோ நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 52 பேர் காயம்
டோக்கியோ நிலநடுக்கத்தில் சிக்கி காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ளது.
டோக்கியோ நிலநடுக்கத்தில் சிக்கி காயமடைந்தவர்களின் எண்ணிக்கை 52ஆக உயர்ந்துள்ளது.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் நேற்றிரவு 10:41 நிலநடுக்கம் ஏற்பட்டது. வடமேற்கு சிபா மாகாணத்தில் உணரப்பட்ட இந்த நிலநடுக்கமானது 5.9ஆகப் பதிவானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தைத் தொடர்ந்து சைதாமா, சிபா உள்ளிட்ட பகுதிகளில் கட்டடங்கள் குலுங்கின.
இதனால் அஞ்சம் அடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே தெருக்களில் தஞ்சமடைந்தனர். மேலும் நிலநடுக்கம் காரணமாக பல்வேறு பகுதிகளில் ரயில் சேவை நிறுத்தப்பட்டதோடு மின்சாரம் சேவையும் துண்டிக்கப்பட்டது. இதனால் மக்கள் கடும் அவதிக்கு உள்ளாகினர்.
இதையும் படிக்க- அதிவேக போர் விமானத்தில் பயணம்; மறக்கமுடியாத பறக்கும் தருணத்தை நினைவுகூர்ந்த மத்திய அமைச்சர்
நிலநடுக்கத்தில் சிக்கி இதுவரை 52 பேர் காயமடைந்துள்ளனர். சிபா 14, டோக்கியோ 12, சைதாமா 11 என மொத்தம் 52 பேர் காயமடைந்துள்ளனர். முன்னதாக ஜப்பானில், 2011ஆம் ஆண்டு மிகப் பெரிய நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் சிக்கி 15 ஆயிரம் மக்கள் பலியானார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.