உலகம்

உலகம் முழுவதும் கரோனாவால் 49.5 லட்சம் பேர் பலி

DIN

உலகளவில் கடந்த ஆண்டிலிருந்து இதுவரை கரோனாவால் பலியானவர்களின் எண்ணிக்கை 49.5 லட்சமாக அதிகரித்துள்ளது. 

உலகம் முழுவதும் கரோனா தொற்றை கட்டுப்படுத்தும் நோக்குடன் அரசுகள் செயல்பட்டு வந்தாலும்  நோய் பரவலின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

இதனால் பலியானவர்களின் எண்ணிகையும் கணிசமாக உயர்ந்து வருகிறது. உலக கரோனா நிலவரத்தின் தினசரி அறிக்கையின் மூலம் இதுவரை கரோனாவல் 49.5 லட்சம் உயிரிழந்திருப்பதாக தெரிவிக்கப்பட்டிருகிறது.

4.54 கோடி பேர் தொற்றால் பாதித்த அமெரிக்காவில் கரோனாவால் 7.37 லட்சம் பேர் பலியாகியிருக்கிறார்கள்.

இரண்டாவது இடத்தில் இருக்கும் இந்தியாவில் 3.41 கோடி பேர் கரோனாவால் பாதிப்படைந்திருக்கிறார்கள். 4.54 லட்சம் பேர் நோயின் தீவிரத்தில் பலியாகியிருக்கிறார்கள்.

பலியானவர்களின் எண்ணிக்கை - பிரேசில் (6,05,099) இந்தியா  (4,54,851), மெக்ஸிகோ  (2,86,259), பெரு  (2,00,019), ரஷியா  (2,26,403),  இந்தோனேசியா  (1,43,848), இங்கிலாந்து  (1,39,950) இத்தாலி  (1,31,826), கொலம்பியா  (1,27,067), பிரான்ஸ்  (1,18,405)  ஈரான் (1,25,223) , அர்ஜென்டினா (1,15,886)

உலகளவில் தொற்றால் பாதிக்கப்பட்டவர்கள் 24.4 கோடி பேர்.தொற்றிலிருந்து மீண்டவர்கள் 23.18 கோடி பேர்.

மேலும் உலகம் முழுவதும் நோயின் தாக்கத்தை குறைக்க இதுவரை 683 கோடி தடுப்பூசிகள்   செலுத்தப்பட்டுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிறந்தநாள் வாழ்த்துகள் த்ரிஷா!

தமிழ்நாடு முழுவதும் போா்க்கால அடிப்படையில் அரசுப் பேருந்துகளும் சீரமைப்பு

இயற்கை உபாதைக்காக தோட்டத்திற்குச் சென்ற தலித் சிறுமி எரிந்த நிலையில் சடலமாக மீட்பு

பிரசாரம் செய்ய பணமில்லை: தேர்தலில் இருந்து விலகும் புரி காங்கிரஸ் வேட்பாளர்

ராகுலை பிரதமராக்க விரும்பும் பாகிஸ்தான் தலைவர்கள்: பிரதமர் மோடி

SCROLL FOR NEXT