முகப்பு
உலகம்

தேச துரோக வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் ராணுவ ஜெனரலின் மகன் சிக்கியது எப்படி?

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு பதவிக்காலம் நீட்டிக்கப்பட்டிருப்பதை முன்னாள் ராணுவ ஜெனரல் ஜாஃபர் மேஹதி அஸ்காரியின் மகன் விமரிசித்திருந்தார்.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:29 AM
கமர் ஜாவேத் பாஜ்வா (கோப்புப்படம்)
பகிர்:

பாகிஸ்தான் ராணுவ தளபதி கமர் ஜாவேத் பாஜ்வா ராஜிநாமா செய்யக் கோரி முன்னாள் ராணுவ ஜெனரல் ஜாஃபர் மேஹதி அஸ்காரியின் மகன் கடிதம் எழுதியிருந்தார். இதற்காக, அவருக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்து அந்நாட்டு ராணுவ நீதிமன்றம் பிறப்பித்துள்ளது.

கமர் ஜாவேத் பாஜ்வாவுக்கு வழங்கப்பட்டிருக்கும் பதவிக் கால நீட்டிப்பை விமரிசித்து ஹாசன் அஸ்காரி கடிதம் எழுதியிருந்தார். பாஜ்வா ராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் கடிதத்தில் குறிப்பிட்டிருந்தார். 

இதன் காரணமாக, ஹாசன் அஸ்காரிக்கு எதிராக தொடரப்பட்ட தேச துரோக வழக்கில் அவர் குற்றவாளி என நிரூபணமாகியுள்ளது. இதுகுறித்து பிபிசி வெளியிட்ட செய்தியில், "இந்த ஆண்டு ஜூலை மாதம் நடத்தப்பட்ட விசாரணையில் பாகிஸ்தான் ராணுவ நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட ஒரு அலுவலர் ஹாசனுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்தார்.

சாஹிவாலில் உள்ள உயர் பாதுகாப்பு சிறையில் இருக்கும் தனது மகனைச் சந்திப்பதில் சிரமம் இருப்பதாக ஜாஃபர் மேஹதி அஸ்காரி புகார் அளித்திருந்தார்" எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த தேச துரோக வழக்கின் விசாரணை கேமராவில் பதிவு செய்யப்பட வேண்டும் என இஸ்லாமாபாத் உயர் நீதிமன்றம் ஜனவரி மாதம் தெரிவித்திருந்தது. விசாரணையின் போது, ​​ராணுவத்தை சேராத ஒருவரை ராணுவ நீதிமன்றம் விசாரிக்க முடியுமா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. குடிமகன்களை ராணுவ நீதிமன்றத்தில் விசாரிப்பது குறித்த முடிவை நீதிமன்றம் எடுக்கவுள்ளது. 
 

முழு கட்டுரையைப் படிக்க →