முகப்பு
உலகம்

கனடா : கரோனாவால் 15 லட்சம் பேர் பாதிப்பு

கனடா நாட்டில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:03 AM
கனடா : கரோனாவால் 15 லட்சம் பேர் பாதிப்பு
பகிர்:

கனடா நாட்டில் கடந்த ஆண்டிலிருந்து தற்போது வரை கரோனாவால் 15 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

கரோனாவின் தீவிரம் பல்வேறு நாடுகளிலும் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் கனடாவில் இதுவரை 15.03 லட்சம் பேர் தொற்றால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள் .

நேற்று (செப்-1) நிலவரப்படி புதிதாக 1,346 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து கரோனா பாதிப்பு 15 லட்சமாக உயர்ந்திருக்கிறது. மேலும் இதுவரை தொற்றால் பலியானவர்கள் எண்ணிக்கை 26,947 ஆகவும் பதிவாகியிருக்கிறது.

1.4 கோடி  மக்கள் தொகை கொண்ட ஒண்டாரியோ மாகாணத்தில் இதுவரை 5.66 லட்சம் தொற்றுக்கு ஆளானதாகவும் அதில் 9,516 பேர் உயிரிழந்திருக்கிறார்கள் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. நேற்று அதிகபட்சமாக 10,543 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டிருக்கிறது.

மேலும் கனடாவில் இதுவரை 9.96 கோடி  பேருக்கு  இரண்டு தவணை தடுப்பூசி வழங்கப்பட்டிருக்கிறது எனவும் சுகாதாரத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →