உலகம்

காபூல் விமான நிலையத்தை மீண்டும் திறக்கும் பணியில் கத்தார்

DIN

காபூல் விமான நிலையத்தை மீண்டும் திறக்கும் பணியில் தலிபான்களுக்கு கத்தார் உதவி வருவதாக அந்நாட்டின் வெளியுறவுத்துறை அமைச்சர் முகமது அப்துல்ரஹ்மான் வியாழக்கிழமை தெரிவித்துள்ளார். 

கடந்த 20 ஆண்டுகளாக பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வந்த அமெரிக்க படைகள் திரும்பப் பெறப்பட்டதையடுத்து தலிபான்கள் ஆட்சியைக் கைப்பற்றினர்.

இதுவரை காபூல் விமான நிலையத்தை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த அமெரிக்கா, ஆகஸ்ட் 30 இரவு முழுமையாக நாட்டைவிட்டு வெளியேறியது.

இந்நிலையில், காபூல் விமான நிலையத்தை மீண்டும் செயல்பாட்டிற்கு கொண்டு வரும் பணியில் தலிபான்களுக்கு கத்தார் நாடு உதவி வருகிறது.

இதுகுறித்து கத்தார் வெளியுறவுத்துறை அமைச்சர் வெளியிட்ட செய்தியில்,

காபூல் விமான நிலையத்தை இயக்க தலிபான்களுக்கு உதவி வருகிறோம். விரைவில் செயல்பாட்டிற்கு வரும் என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கனமழை எச்சரிக்கை: குற்றாலம் அருவிகளில் குளிக்க 5 நாள்கள் தடை

அம்பாசமுத்திரத்தை அச்சுறுத்திய சிறுத்தை சிக்கியது!

காரில் கஞ்சா விற்பனை: 6 போ் கைது

கூத்தாநல்லூா் அருகே யூ டியூபா் ஃபெலிக்ஸ் ஜெரால்டு வீட்டில் போலீஸாா் சோதனை

இன்று அதிர்ஷ்டம் யாருக்கு: தினப்பலன்!

SCROLL FOR NEXT