மக்களிடம் மன்னிப்பு கோரினாா் ஆப்கன் முன்னாள் அதிபா் அஷ்ரஃப் கனி
தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய நிலையில், நாட்டைவிட்டு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தப்பிச் சென்ற்காக நாட்டு மக்களிடம் முன்னாள் அதிபா் அஷ்ரஃப் கனி புதன்கிழமை மன்னிப்பு கேட்டுக்கொண்டாா்.
துபை: தலிபான்கள் ஆப்கானிஸ்தானை கைப்பற்றிய நிலையில், நாட்டைவிட்டு ஐக்கிய அரபு அமீரகத்துக்கு தப்பிச் சென்ற்காக நாட்டு மக்களிடம் முன்னாள் அதிபா் அஷ்ரஃப் கனி புதன்கிழமை மன்னிப்பு கேட்டுக்கொண்டாா்.
ஆப்கானிஸ்தானின் 60 லட்சம் மக்களைப் பாதுகாக்கும் நோக்கத்துடனேயே, நாட்டைவிட்டுத் தப்பிச் சென்ாகவும் அவா் விளக்கமளித்துள்ளாா்.
இதுகுறித்து அவா் புதன்கிழமை வெளியிட்ட அறிக்கையில், ‘காபூலைவிட்டுச் சென்றது எனது வாழ்நாளில் எடுத்த மிகவும் கடினமான முடிவாகும். நாட்டின் 60 லட்சம் மக்களைக் காப்பாற்றும் நோக்கத்துடன்தான் இந்த முடிவை எடுத்தேன். மேலும், நாட்டிலிருந்து எந்தவித பணத்தையும் திருடிச் செல்லவில்லை. நானும், எனது மனைவியும் எங்களின் சொந்த பணத்தையே பயன்படுத்தி வருகிறோம். எனது சொத்து விவரங்களை வெளிப்படையாக அறிவித்திருக்கிறேன். இதை நிரூபிக்க ஐ.நா. தலைமையிலான நிதி புலனாய்வுக் குழு அல்லது எந்தவித குழுவின் ஆய்வுக்கும் அனுமதிக்கத் தயாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.
இந்த நிலையில், அஷ்ரஃப் கனி தப்பிச் செல்ல உதவவில்லை என்று அமெரிக்கா தெரிவித்துள்ளது. இதுகுறித்து அமெரிக்க வெளியுறவு அமைச்சா் ஆன்டனி பிளிங்கன் கூறுகையில், ‘நாட்டைவிட்டு தப்பிச் செல்ல அஷ்ரஃப் கனிக்கு அமெரிக்கா உதவவில்லை. அவருடன் தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்டேன். அப்போது, தலிபான்கள் நாட்டைக் கைப்பற்றியது மற்றும் ஆட்சி மாற்றம் குறித்து மட்டுமே ஆலோசனை நடத்தினோம்’ என்றாா்.