முகப்பு
உலகம்

ஆப்கானிஸ்தானிலிருந்து வரும் விமானங்களுக்கு அனுமதி மறுப்பு; அமெரிக்காவின் நடவடிக்கைக்கு காரணம் என்ன?

ஆப்கனிலிருந்து 100க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களை ஏற்றிவரும் விமானங்களுக்கு அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை தரையிறக்கும் அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.

Updated On : 28 ஜனவரி, 2024 at 4:15 AM
கோப்புப்படம்
பகிர்:

ஆப்கானிஸ்தானிலிருந்து 100க்கும் மேற்பட்ட அமெரிக்கர்களையும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களையும் ஏற்றிவரும் விமானங்களுக்கு அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை தரையிறக்கும் அனுமதி வழங்க மறுப்பு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து டைனமோ என்ற அரசு சாரா அமைப்பின் நிறுவனர் பிரையன் ஸ்டர்ன் கூறுகையில், "அமெரிக்காவில் உள்ள சர்வதேச விமான நிலையங்களில் இம்மாதிரியான விமானங்களை தரையிறக்குவதற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது" என்றார்.

ராய்ட்டர்ஸ் செய்தி நிறுவனத்திடம் இதுகுறித்து விரிவாக பேசிய அவர், "காம் ஏர் என்ற தனியார் ஆப்கன் விமான நிறுவனத்தின் விமானம் மூலம் காபூலிலிருந்து 59 குழந்தைகள் உள்பட 117 பேருடன் அபு தாபிக்கு வந்தடைந்தோம். அபு தாபி விமான நிலையத்தில் 14 மணி நேரமாக காத்துக் கொண்டிருக்கிறோம்" என்றார்.

கடந்த மாதம், ஆப்கானிஸ்தானில் மீட்பு பணிகளை தீவிரப்படுத்துவதற்காக சென்றிருந்த அமெரிக்க ராணுவத்தின் மூத்த அலுவலர்கள், முன்னாள் இந்நாள் உயர் மட்ட அலுவலர்கள் ஆகியோர் கொண்ட குழுதான் தரையிறங்கும் அனுமதி கிடைக்காமல் அபு தாபி விமான நிலையத்தில் சிக்கியுள்ளது. முன்னதாக, ஆப்கானிஸ்தானில் மீட்பு பணிகள் மோசமாக மேற்கொள்ளப்படுவதாக புகார் எழுந்த நிலையில், இக்குழு அங்கு அனுப்பிவைக்கப்பட்டது.

தரையிறங்கும் அனுமதி மறுக்கப்படுவதற்கான காரணத்தை அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்பு துறை இன்னும் வெளியிடவில்லை. இதுகுறித்து அலுவலர் ஒருவர் கூறுகையில், "இந்த விவகாரம் குறித்து நாங்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால், விமானங்களின் விவரங்கள் சரிபார்க்கப்பட்ட பின்னரே, அமெரிக்காவில் தரையிறங்க அனுமதி வழங்கப்படும். இதற்கு எப்போதும் சிறுதி காலமாகும்" என்றார்.

கடந்த மாதம் மீட்பு பணிகளின்போது, ஆப்கானிஸ்தானிலிருந்து வெளியேற முடியாத தவித்த அமெரிக்கர்களையும் கிரீன் கார்டு வைத்திருப்பவர்களையும் திரும்ப அழைத்து கொள்வதற்கு முன்னுரிமை வழங்கப்படும் என அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்திருந்தார்.

முழு கட்டுரையைப் படிக்க →