முகப்பு
உலகம்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண ஆளுநர் சௌத்ரி முகமது ஷ்ர்வார் நீக்கம்

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண ஆளுநர் சௌத்ரி முகமது ஷ்ர்வாரை அந்த பொறுப்பில் இருந்து நீக்கி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:52 AM
சௌத்ரி முகமது ஷ்ர்வார்
பகிர்:

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாண ஆளுநர் சௌத்ரி முகமது ஷ்ர்வாரை அந்த பொறுப்பில் இருந்து நீக்கி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

பஞ்சாப் பிரதமர் இம்ரான் கான் தலைமையிலான அரசின் மீது நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நடைபெறுவதற்கு முன்னதாகவே பாகிஸ்தான் அரசியலில் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், பஞ்சாப் மாகாண ஆளுநர்  சௌத்ரி முகமது ஷ்ர்வாரை ஆளுநர் பொறுப்பில் இருந்து நீக்கி அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. 

இதுகுறித்து அந்நாட்டு தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சர் பாவத் சௌத்ரி தனது அதிகாரப்பூர்வ ட்விட்டரில் இதனை தெரிவித்துள்ளார்.

மேலும் "புதிய ஆளுநர் நியமனம் குறித்து பின்னர் அறிவிக்கப்படும், அதுவரை துணை ஆளுநர் தற்காலிக ஆளுநராக செயல்படுவார்" என்றுஃபவாத் சௌத்ரி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் எதிர்கட்சியான பிஎம்எல்-என் கட்சியைச் சேர்ந்தவர் ஆளுநர் சௌத்ரி முகமது ஷர்வார். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.