உலகம்

147 விமானங்கள், 134 ஹெலிகாப்டர்கள் சேதம்: உக்ரைன் வெளியிட்ட தரவுகள்

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய ராணுவம் சந்தித்துள்ள இழப்புகள் குறித்த தரவுகளை உக்ரைன் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

DIN

உக்ரைனுக்கு எதிரான போரில் ரஷிய ராணுவம் சந்தித்துள்ள இழப்புகள் குறித்த தரவுகளை உக்ரைன் ராணுவம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் தாக்குதல் ஒரு மாதத்தைக் கடந்து தொடர்ந்து வருகிறது. தலைநகரான கீவ், கார்கீவ் உள்பட முக்கிய நகரங்களை ரஷிய ராணுவத்தினர் முற்றிலும் அழித்துள்ளனர். 

பல்வேறு நாடுகளின் ராணுவ  ஆயுதங்கள் உதவியுடன் உக்ரைனும் ரஷிய வீரர்களை எதிர்த்து தொடர்ந்து போரிட்டு வருகிறது. இந்நிலையில், உக்ரைன் தாக்குதலில் ரஷிய ராணுவத்தைச் சேர்ந்த 18,300 வீரர்கள் உயிரிழந்துள்ளதாக உக்ரைன் ராணுவம் தெரிவித்துள்ளது. 

இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பில், 147 விமானங்கள், 134 ஹெலிகாப்டர்கள், 647 டாங்கிகள், 7 படகுகள், 1,273 நான்கு சக்கர வாகனங்கள், 76 எரிபொருள் நிரப்பும் வாகனங்கள், 1,844 ராணுவ வீரர்களை ஏற்றிச்செல்லும் கனரக வாகனங்கள், 4 மொபைல் ராக்கெட் லாஞ்சிங் மெஷின், 92 ட்ரோன்கள் உள்ளிட்டவை அழிக்கப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

எல்லையில் அத்துமீறிய டிரோன்கள் : பாகிஸ்தானுக்கு இந்தியா கடும் எச்சரிக்கை!

ஈரானுடனான வர்த்தக நாடுகள் மீது அமெரிக்கா 25% வரி விதிப்பு: இந்தியாவுக்கு பெரிய பாதிப்பு இல்லை!

காரை நிறுத்தி குழந்தைக்கு பொங்கல் வாழ்த்து சொன்ன நடிகர் சூரி!

டாடா பன்ச் ஃபேஸ்லிப்ட் அறிமுகம்!

போகி பண்டிகை : புதுச்சேரியில் நாளை விடுமுறை!

SCROLL FOR NEXT