உலகம்

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் ராஜிநாமா

DIN

இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவார்ட் கப்ரால் தனது பதவியை திங்கள்கிழமை ராஜிநாமா செய்தார்.

மத்திய வங்கியின் ஆளுநர் வெளியிட்ட டிவிட்டர் செய்தியில் கூறியதாவது:

“அனைத்து அமைச்சர்களும் ராஜிநாமா செய்துள்ள சூழலில், மத்திய வங்கியின் ஆளுநர் பதவியை ராஜிநாமா செய்து கடிதத்தை அதிபர் கோத்தபய ராஜபட்சவிடம் அளித்துள்ளேன்” எனத் தெரிவித்துள்ளார்.

கடுமையான பொருளாதார நெருக்கடியில் தவிக்கும் இலங்கையில் சமையல் எரிவாயு, பெட்ரோல், டீசல், அத்தியாவசியப் பொருள்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அத்தியாவசியப் பொருள்களுக்காக மக்கள் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச மற்றும் பிரதமர் மகிந்த ராஜபட்சவுக்கு எதிராக நாடு முழுவதும் போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதனைத் தொடர்ந்து, பிரதமரை தவிர்ந்து பிற அமைச்சர்கள் அனைவரும் ஞாயிற்றுக்கிழமை ராஜிநாமா செய்தனர். அவர்களின் ராஜிநாமாவை ஏற்றுக் கொண்ட அதிபர், அனைத்து கட்சிகள் உள்ளடங்கிய அமைச்சரவையை அமைக்க அழைப்பு விடுத்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

யோகம் யாருக்கு? தினப் பலன்கள்!

தென்பரை ஆவணியப்பன் கோயிலில் குதிரை எடுப்பு திருவிழா

‘பாதுகாப்புத்துறை பணியிடங்களில் சேரும் தகுதியை மாணவா்கள் வளா்த்துக் கொள்ள வேண்டும்’

துறைமுகத்திலிருந்து நிலக்கரி ஏற்றிச் செல்லும் லாரிகளுக்கு கட்டுப்பாடு

திருநள்ளாற்றில் மாரியம்மன் வீதியுலா

SCROLL FOR NEXT