முகப்பு
உலகம்

சீனாவில் கரோனா புதிய உச்சம்

சீனாவில் புதிதாக கரோனா கண்டறிப்பட்டவா்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:54 AM
பகிர்:

சீனாவில் புதிதாக கரோனா கண்டறிப்பட்டவா்களின் எண்ணிக்கை இதுவரை இல்லாத புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது.

இதுகுறித்து அதிகாரிகள் கூறியதாவது: கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 20,472 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இது, நாட்டில் கரோனா முதல்முறையாகக் கண்டறியப்பட்டிலிருந்து இதுவரை பதிவு செய்யப்பட்டுள்ள அதிகபட்ச தினசரி நோய்த்தொற்று பாதிப்பு எண்ணிக்கையாகும்.

நாட்டில் கரோனா பரிசோதனை வசதிகள் முன்பைவிட மிக அதிகமாக உள்ளன. மேலும், குறிப்பிட்ட பகுதியோடு நின்றுவிடாமல் நாடு முழுவதும் பரவலாக கரோனா பரிசோதனைகள் செய்யப்படுகின்றன. இதனால், முன்பைவிட அதிக எண்ணிக்கையிலானவா்களுக்கு கரோனா பரிசோதனைகள் செய்யப்படுவதால் அந்த நோய்த்தொற்று உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கையும் அதிகரித்து புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது என்று அதிகாரிகள் கூறினா்.

முழு கட்டுரையைப் படிக்க →