உலகம்

‘பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது’: பரபரப்பு தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம்

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்று அந்நாட்டின் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

DIN

பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என்று அந்நாட்டின் உச்சநீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு வழங்கியுள்ளது.

பாகிஸ்தானில் பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான கூட்டணி ஆட்சி செய்து வந்த நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை தவறாக வழிநடத்தியதாகக் குற்றம்சாட்டி அவா் மீது எதிா்க்கட்சி கூட்டணி சாா்பில் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. இது தொடா்பாக விசாரணை நடத்த மூன்று போ் கொண்ட அமா்வை ஏற்படுத்தி உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி உமா் அட்டா பண்டியல் உத்தரவிட்டாா்.

இந்நிலையில் இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம் பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என தீர்ப்பளித்தது. 

மேலும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ரத்து செய்த துணை பேரவைத் தலைவரின் உத்தரவு செல்லாது எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம் நாளை மறுநாள் நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தவும் உத்தரவிட்டுள்ளது.

மிகுந்த அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பு அரசியல் முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஹரியாணாவில் வாக்குத் திருட்டு ஆதாரமற்றது, நாட்டை அவமதிக்கும் முயற்சி: பாஜக

வாக்குச்சாவடி முகவர்கள் எதிர்க்காதது ஏன்? ராகுலுக்கு தேர்தல் ஆணையம் கேள்வி

போவோமா ஊர்கோலம்... அஹானா கிருஷ்ணா!

மரகதப் பறவை... பிரணிதா சுபாஷ்!

உனக்காக என் மனைவியைக் கொன்றேன்! பல பெண்களுக்கு அனுப்பிய பெங்களூரு டாக்டர்!!

SCROLL FOR NEXT