உலகம்

இம்ரான் கானுக்கு எதிராக நாளை (ஏப்.9) நம்பிக்கையில்லா தீர்மானம்

DIN

பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நாளை (ஏப்.9) நடைபெற உள்ளது.

பாகிஸ்தானில் பிரதமா் இம்ரான் கான் தலைமையிலான கூட்டணி ஆட்சி செய்து வந்த நிலையில் நாட்டின் பொருளாதாரத்தை தவறாக வழிநடத்தியதாகக் குற்றம்சாட்டி அவா் மீது எதிா்க்கட்சி கூட்டணி சாா்பில் நம்பிக்கையில்லா தீா்மானம் கொண்டு வரப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் பிரதமா் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது. இந்த விவகாரத்தை உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரணைக்கு எடுத்துக் கொண்டது. 

இந்த வழக்கை வியாழக்கிழமை விசாரித்த உச்சநீதிமன்றம் பிரதமர் இம்ரான் கானின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது செல்லாது என தீர்ப்பளித்தது. 

மேலும் நம்பிக்கை இல்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பை ரத்து செய்த துணை பேரவைத் தலைவரின் உத்தரவு செல்லாது எனத் தெரிவித்த உச்சநீதிமன்றம் நாளை நம்பிக்கையில்லா தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்தவும் உத்தரவிட்டது.

இந்நிலையில் நாளை ஏப்ரல் 9ஆம் தேதி பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீது வாக்கெடுப்பு நடைபெற உள்ளது.

அரசியல் பரபரப்புகளுக்கு மத்தியில் பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் நடைபெற உள்ள நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு மிகுந்த எதிர்பார்ப்புகளை அரசியல் அரங்கில் ஏற்படுத்தியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பைக்கு ஹார்திக் பாண்டியா சரியான தேர்வு; முன்னாள் வீரர் ஆதரவு!

எச்.டி.ரேவண்ணா மீது மேலும் ஒரு வழக்கு

வேட்டையன் படப்பிடிப்பில் அமிதாப் பச்சன்-ரஜினிகாந்த்!

‘நீங்க நடிக்க ஆரம்பிக்கலாமே, ஜோனிடா!’

போஷியா! மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு பற்றி உங்களுக்குத் தெரியுமா?

SCROLL FOR NEXT