உலகம்

உக்ரைன் ரயில் நிலையத்தில் ஏவுகணை தாக்குதல்: பலி எண்ணிக்கை 52 ஆக உயர்வு

DIN

உக்ரைனின் கிழக்குப் பகுதியிலுள்ள ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை நடத்தப்பட்ட ஏவுகணைத் தாக்குதலில் பலி எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளது. 

ரஷியா மற்றும் உக்ரைன் படையினரிடையே தீவிர சண்டை நடந்துகொண்டிருக்கும் டொனட்ஸ்க் பிராந்தியத்தைச் சேர்ந்த நகரம் க்ரமடோர்க்ஸ். போரிலிருந்து தப்பிப் பாதுகாப்பான இடங்களுக்குச் செல்வதற்காக அந்த ரயில் நிலையத்தில் வெள்ளிக்கிழமை ஏராளமானவர்கள் காத்திருந்தனர். 

அப்போது அந்த ரயில் நிலையத்தின் மீது ஏவுகணைகள் வீசி ரஷிய படையினர் தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் குழந்தைகள், பெண்கள் என பலியானோர் எண்ணிக்கை 52 ஆக உயர்ந்துள்ளனர். ஏராளமானவர்கள் காயமடைந்ததாகவும் உக்ரைன் அதிகாரிகள் தெரிவித்தனர். உக்ரைன் ரயில் நிலையத்தைச் சுற்றி சுமார் 4,000 பொதுமக்கள் கூடியிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.  

உக்ரைன் ரயில் நிலையத்தில் தாங்கள் தாக்குதல் நடத்தியதாகக் கூறப்படுவதை ரஷியா திட்டவட்டமாக மறுத்துள்ளது. போா்க் களங்களில் பொதுமக்களை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்த உக்ரைன் விரும்புகிறது. எனவே, அந்தப் பகுதிகளிலிருந்து அவா்கள் வெளியேறுவதைத் தடுப்பதற்காகவே ரயில் நிலையத்தில் உக்ரைன் ராணுவம் தாக்குதல் நடத்தியுள்ளது என ரஷியா குற்றம் சாட்டியுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

SCROLL FOR NEXT