அமெரிக்காவில் பாதுகாப்பு ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் நியமிக்கப்பட்டுள்ளார்.
அமெரிக்காவின் துணை அதிபர் கமலா ஹாரிஸின் பாதுகாப்பு ஆலோசகராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த சாந்தி சேத்தி நியமிக்கப்பட்டுள்ளார்.
1993 ஆம் ஆண்டு கடற்படையில் இணைந்த சாந்தி சேத்தி 2010-2012 காலகட்டத்தில் அமெரிக்க கடற்படையைச் சேர்ந்த ஒரு பெரிய போர் கப்பலுக்கு தளபதியாக இருந்தவர்.
தற்போது, கமலா ஹாரிஸுக்கு அதிகாரப்பூர்வமான பாதுகாப்பு ஆலோசகராக செயல்பட இருப்பதாக அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், இந்தியாவுக்கு வருகை தந்த அமெரிக்க கடற்படை கப்பலின் முதல் பெண் தளபதி இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.