இலங்கையில் அனைத்துக் கட்சி ஆட்சி: பிரதமர் பதவியிலிருந்து விலகும் மகிந்த ராஜபட்ச?
பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபட்சவை நீக்கிவிட்டு புதிய பிரதமர் தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்கவும் அதிபர் கோத்தபய சம்மதம் தெரிவித்திருப்பதாக முன்னாள் அதிபர் மைத்ரிபால சிறிசேனா தெரிவித்துள்ளார்.
கொழும்பு: இலங்கையில், அனைத்துக் கட்சிகள் பங்கேற்கும் புதிய அரசு புதிய பிரதமர் தலைமையில் அமைய அந்நாட்டு அதிபர் ஒப்புக்கொண்டதாக ஸ்ரீ லங்கா சுதந்திரா கட்சி அறிவித்துள்ளது.
இலங்கையில், அனைத்துக் கட்சிகளும் பங்குபெறும் புதிய அமைச்சரவை அமையவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
ஸ்ரீலங்கா சுதந்திரா காட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் மைத்ரிபால சிறிசேனா இது குறித்து தெரிவித்திருப்பதாவது, பிரதமர் பதவியிலிருந்து மகிந்த ராஜபட்சவை நீக்கிவிட்டு புதிய பிரதமர் தலைமையில் புதிய அமைச்சரவை அமைக்கவும், அனைத்துக் கட்சிகளும் பங்குபெறும் புதிய அமைச்சரவை அமைக்கவும் அதிபர் கோத்தபய சம்மதம் தெரிவித்திருப்பதாக குறிப்பிட்டுள்ளார்.
வெள்ளிக்கிழமை காலை, அதிபர் கோத்தபய ராஜபட்சவுடன் 11 கட்சித் தலைவர்கள் நடத்திய ஆலோசனைக் கூட்டத்தில் இந்த முடிவு எட்டப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.