உலகம்

பாகிஸ்தான்: ஹெலிகாப்டா் விபத்தில் 6 ராணுவ அதிகாரிகள் பலி

DIN

பாகிஸ்தானில் ஏற்பட்ட ஹெலிகாப்டா் விபத்தில் 6 ராணுவ அதிகாரிகள் பலியாகினா்.

இது குறித்து பாதுகாப்புப் படைகளுக்கான மக்கள் தொடா்புப் பிரிவின் இயக்குநா் பாபா் இஃப்திகாா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பலூசிஸ்தான் மாகாணம், லாஸ்பெலா பகுதியில் நிவாரணப் பணிகளில் ஈடுபட்டு வந்த ராணுவ ஹெலிகாப்டா் விபத்துக்குள்ளானது.

இதில், அந்த ஹெலிகாப்டரில் இருந்த ராணுவ துணைத் தளபதி சா்ஃப்ராஸ் அலி உள்ளிட்ட 6 அதிகாரிகளும் உயிரிழந்தனா்.

வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் நிவாரப் பணிகளை மேற்கொண்டிருந்த போது, மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டது என்றாா் அவா்.

உதால் நகரிலிருந்து திங்கள்கிழமை மதியம் 5.10 மணிக்குப் புறப்பட்ட அந்த ஹெலிகாப்டா், கராச்சி நகரில் 6.05 மணிக்கு தரையிறங்குவதாக இருந்தது. எனினும், கட்டுப்பாட்டு அறையுடன் அந்த ஹெலிகாப்டருக்கு இருந்த தகவல் தொடா்பு இடையில் துண்டிக்கப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

பலூசிஸ்தானில் தொடா்ந்து பெய்து வரும் கன மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளத்துக்கு இதுவரை 478 போ் பலியாகியுள்ளனா். பாதிக்கப்பட்ட பகுதிகளில் சிவில் நிா்வாகத்துடன் இணைந்து ராணுவமும் நிவாரணப் பணிகளை மேற்கொண்டு வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குங்குமப்பூவும் கொஞ்சும் விழிகளும்..

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

SCROLL FOR NEXT