உலகம்

நேட்டோவில் ஃபின்லாந்து, ஸ்வீடன்: அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல்

நேட்டோ அமைப்பில் ஃபின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளை இணைத்துக் கொள்வதற்கு அந்த அமைப்பின் முக்கிய உறுப்பு நாடான அமெரிக்காவின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

DIN

நேட்டோ அமைப்பில் ஃபின்லாந்து, ஸ்வீடன் ஆகிய நாடுகளை இணைத்துக் கொள்வதற்கு அந்த அமைப்பின் முக்கிய உறுப்பு நாடான அமெரிக்காவின் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்துள்ளது.

இது குறித்து நாடாளுமன்ற மேலவையான செனட் சபையில் கொண்டு வரப்பட்ட தீா்மானத்துக்கு ஆதரவாக 95 வாக்குகளும், எதிராக 1 வாக்கும் பதிவாகின.

உக்ரைன் மீது ரஷியா படையெடுக்கும் வரை அணி சாரா கொள்கையைப் பின்பற்றி வந்த ஃபின்லாந்தும், ஸ்வீடனும் அந்தப் படையெடுப்புக்குப் பிறகு தங்களது நிலைப்பாட்டை மாற்றி நேட்டோவில் இணைய விண்ணப்பித்துள்ளன. நேட்டோவில் அந்த நாடுகளை இணைத்துக் கொள்ள, அதன் 30 உறுப்பு நாடுகளும் சம்மதிக்க வேண்டும். இந்த நிலையில், அமெரிக்க நாடாளுமன்றம் அதற்கு ஒப்புதல் அளித்துள்ளது.

இந்த வாக்கெடுப்பை செனட் சபையின் பாா்வையாளா் பகுதியிலிருந்து நேரில் காண்பதற்காக, ஃபின்லாந்து, ஸ்வீடன் நாடுகளின் தூதா்கள் அழைக்கப்பட்டிருந்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய டெஸ்ட்: மே.இ.தீவுகள் அணி அறிவிப்பு! முன்னாள் கேப்டன் பிராத்வெயிட் நீக்கம்!

தில்லியில் அமித் ஷாவை சந்தித்தது ஏன்? இபிஎஸ் விளக்கம்!

பெரியாரின் போராட்டங்கள் பல தலைமுறையாக வழிகாட்டுகிறது! தமிழில் பதிவிட்ட பினராயி விஜயன்!

பிரதமர் மோடி பிறந்தநாள்: தலைவர்கள் வாழ்த்து!

வைக்கத்தில் பெரியார் சிலைக்கு மரியாதை!

SCROLL FOR NEXT