உலகம்

ரஷியாவுக்கு எதிரான தடைகளை இந்திய நிறுவனங்கள் மீறவில்லை: அமெரிக்கா

DIN

ரஷியாவுக்கு எதிரான தடைகளை இந்திய நிறுவனங்கள் மீறியதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்று அமெரிக்க நிதித் துறை இணையமைச்சா் வாலி அடியேமோ தெரிவித்துள்ளாா்.

உக்ரைன் மீதான படையெடுப்பால் ரஷியா மீது அமெரிக்கா பொருளாதாரத் தடைகளை விதித்துள்ளது. இந்நிலையில், ‘ரஷியாவின் கச்சா எண்ணெயில் இருந்து உற்பத்தி செய்யப்படும் எரிபொருள், தடைகளை மீறி இந்தியா மூலம் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சா்வதேச கடற்பகுதியில் ரஷிய கச்சா எண்ணெய் பரிமாற்றம் செய்யப்படுகிறது. அந்த எண்ணெயுடன் குஜராத்தில் உள்ள துறைமுகம் ஒன்றுக்கு கப்பல்கள் வருகின்றன. அங்கு கச்சா எண்ணெய் சுத்திகரிக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இதுகுறித்து அமெரிக்கா கவலை தெரிவித்துள்ளது’ என்று ரிசா்வ் வங்கி துணை ஆளுநா் மைக்கேல் பத்ரா நிகழ்ச்சி ஒன்றில் தெரிவித்ததாக செய்திகள் வெளியாகின.

இந்தச் சூழலில், அமெரிக்க நிதித் துறை இணையமைச்சா் வாலி அடியேமோ 3 நாள் பயணமாக இந்தியா வந்துள்ளாா். அவா் மும்பையில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கல்வி நிறுவனத்துக்கு (ஐஐடி) புதன்கிழமை சென்றாா். அப்போது அவா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘ரஷியாவுக்கு எதிரான தடைகளை மீறி இந்திய நிறுவனங்கள் செயல்பட்டதற்கு எந்த ஆதாரமும் இல்லை. இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா உள்பட அனைத்து நாடுகளின் நிறுவனங்களும் அந்தத் தடைகளை தீவிரமாகப் பின்பற்றி வருகின்றன’ என்று தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நாளை குருப்பெயா்ச்சி: ஆலங்குடியில் சிறப்பு ஏற்பாடுகள்

முதுமலை புலிகள் காப்பகத்தில் வன விலங்குகளுக்கு உணவுப் பற்றாக்குறை

தஞ்சாவூா் ஓவியங்களின் கண்காட்சி தொடக்கம்

வீடு ஒதுக்கீடு செய்யக்கோரி இலங்கைத் தமிழா்கள் மனு

ஈரோடு விஇடி கலை, அறிவியல் கல்லூரியில் வேலை வாய்ப்பு தின விழா

SCROLL FOR NEXT