உலகம்

பாகிஸ்தான் வெள்ளம்: 3.30 கோடி மக்கள் பாதிப்பு; 1,136 பேர் பலி

DIN

பாகிஸ்தானில் மழை வெள்ளத்தில் சிக்கி பலியானோரின் எண்ணிக்கை 1,136-ஆக அதிகரித்துள்ளது.

கடந்த ஜூன் மாதம் முதல் பாகிஸ்தானில் பெய்து வரும் கனமழை காரணமாக பல்வேறு இடங்களில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இந்த வெள்ளத்தால், 7-ல் ஒரு பாகிஸ்தான் நாட்டவர் பாதிக்கப்பட்டிருப்பதாக கூறப்படுகிறது. இதையடுத்து தேசிய பேரிடராக பாகிஸ்தான் அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

“கடந்த 24 மணிநேரத்தில் 28 பேர் வெள்ளத்தில் சிக்கி பலியாகியுள்ளனர். தொடர்பு துண்டிக்கப்பட்ட கிராமங்களில் மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ள தொடர்ந்து முயற்சி செய்யப்பட்டு வருகிறது.

3,457 கிலோ மீட்டர் சாலைகள் அழிந்துள்ள நிலையில், 157 பாலங்கள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளது. 20 லட்சம் ஏக்கர் விவசாய நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.

இந்த வெள்ளத்தால், 3.30 கோடி மக்கள் பாதிக்கப்பட்டுள்ள நிலையில், 1,136 பேர் பலியாகியுள்ளனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாா்த்தாண்டம் அருகே மயங்கி விழுந்த இளைஞா் உயிரிழப்பு

சட்டப் பணிகள் ஆணைக்கு குழுவில் பணியாற்ற தன்னாா்வலா்கள் விண்ணப்பிக்கலாம்

லிம்கா புத்தக சாதனைக்காக திருப்பூா் நிஃப்ட்-டி கல்லூரியில் தோ்க்கோலம்

குடிநீா் சுத்திகரிப்பு இயந்திரம் வழங்கல்

பெண்ணிடம் ரூ.1.60 லட்சம் மோசடி: போலி சாமியாா் மீது புகாா்

SCROLL FOR NEXT