முகப்பு
உலகம்

உக்ரைனின் எரிசக்தி அமைப்புகள் மீது ரஷிய ஏவுகணைகள் தாக்குதல்!

உக்ரைனின் எரிசக்தி அமைப்புகள் மீது ரஷிய ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது. 

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 11:07 AM
பகிர்:

உக்ரைனின் எரிசக்தி அமைப்புகள் மீது ரஷிய ராணுவம் ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியுள்ளது.

உக்ரைன் மீதான ரஷியாவின் போர் 10 மாதங்களைக் கடந்தும் தொடர்ந்து வருகிறது. ரஷிய ராணுவம் உக்ரைனின் பல்வேறு பகுதிகளைக் கைப்பற்றி வருகிறது. ரஷியாவுக்கு எதிராக உக்ரைனும் போராடி வருகிறது. 

இந்நிலையில் சமீபத்தில் ரஷியா தனது தாக்குதலை தீவிரப்படுத்தி வருகிறது. நேற்று(வெள்ளிக்கிழமை) உக்ரைனின் தலைநகர் கீவ், கார்கிவ் உள்ளிட்ட நகரங்களில் ரஷியா ஒரேநாளில் 70க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசியதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. போர் தொடங்கியதில் இருந்து இது மிகவும் மோசமான தாக்குதல் என்று கூறப்படுகிறது. 

இந்நிலையில் இன்றும் ரஷியா ஏவுகணைத் தாக்குதலைத் தொடர்ந்து வருகிறது. ரஷியாவின் ஏவுகணைகள் உக்ரைனின் எரிசக்தி அமைப்புகளைத் தாக்கியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 12க்கும் அதிகமான ஏவுகணைகள் உக்ரைன் எரிசக்தி அமைப்புகளின் மீது விழுந்துள்ளதாகக் கூறப்படுகிறது. 

இதனால் உக்ரைனின் பெரும்பாலான பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. மேலும் உக்ரைனில்  தற்போது குளிர் அதிகம் இருப்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த குளிர்காலத்தில் தீவிர தரைவழி தாக்குதலை மேற்கொள்ள ரஷியா திட்டமிட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →