தேர்வைப் புறக்கணித்து வெளியேறும் ஆப்கன் மாணவர்கள்! 
உலகம்

பெண்களைப் படிக்கவிடு! தேர்வைப் புறக்கணித்த ஆப்கன் மாணவர்கள்! தலிபான்களுக்கு எதிர்ப்பு!

ஆப்கானிஸ்தானில் பெண்கள் படிக்கத் தடைவிதித்த தலிபான் ஆட்சியின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண் மாணவர்கள் பல்கலைக் கழக தேர்வுகளைப் புறக்கணித்தனர்.

DIN

ஆப்கானிஸ்தானில் பெண்கள் படிக்கத் தடைவிதித்த தலிபான் ஆட்சியின் உத்தரவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆண் மாணவர்கள் பல்கலைக் கழக தேர்வுகளைப் புறக்கணித்தனர்.

பெண்களைப் படிக்க அனுமதிக்க வலியுறுத்தி தேர்வறையிலிருந்து ஆண் மாணவர்கள் வெளிநடப்பு செய்தனர். சில பேராசிரியர்களும் பெண்கள் படிக்கத் தடை விதிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து தங்கள் பணிகளை ராஜிநாமா செய்துள்ளனர். 

ஆப்கானிஸ்தானில் ராணுவ ஆட்சி முடிவுக்கு வந்து, தற்போது தலிபான்கள் ஆட்சி நடைபெற்று வருகிறது. தலிபான்கள் ஆட்சியில் பெண்களுக்கு எதிரான சட்டங்கள் கடுமையாக்கப்பட்டு வருகின்றன. 

அந்தவகையில், தற்போது பெண்கள் கல்லூரி பயில ஆப்கன் அரசு தடை விதித்துள்ளது. ஆப்கன் பல்கலைக்கழகங்களுக்கு பெண்கள் செல்ல தலிபான் ஆட்சியாளா்கள் விதித்த தடையை பாதுகாப்புப் படையினா் புதன்கிழமை (இன்று) அமலுக்கு கொண்டுவந்தனர். 

இந்நிலையில், இன்று பல்கலைக் கழக தேர்வுகளை ஆண் மாணவர்கள் புறக்கணித்து தேர்வறையிலிருந்து வெளிநடப்பு செய்தனர். பெண்களை தலிபான்கள் படிக்க அனுமதிக்க வலியுறுத்தி அனைத்து மாணவர்களும் பல்கலைக் கழகத்தை விட்டு வெளியேறினர். 

இதேபோன்று பல்கலைக் கழகங்களைச் சேர்ந்த பேராசிரியர்கள் சிலரும், பெண்கள் படிக்கக்கூடாது என்ற தலிபான் ஆட்சியாளர்களின் உத்தரவுக்கு எதிராக தங்கள் பணிகளை ராஜிநாமா செய்தனர். 

பல்கலைக் கழக தேர்வறை வாயிலில் அனுமதி மறுக்கப்பட்டு திரண்டிருந்த மாணவிகளுக்கு ஆதரவாக, ஆண் மாணவர்கள் தேர்வறையிலிருந்து வரிசையாக வெளியேறினர். இந்த விடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

ஆப்கானிஸ்தானிலிருந்து அமெரிக் வெளியேறிய பிறகு அந்த நாட்டு ஆட்சியைக் கடந்த ஆண்டு கைப்பற்றிய தலிபான்கள், தங்களது முந்தைய ஆட்சியைப் போலின்றி அனைவருக்கும் உரிய உரிமைகள் அளிக்கப்படும் என்று வாக்களித்தனா். அதனை மீறி அவா்கள் பெண்களின் உயா் கல்விக்கு தடை விதித்துள்ளதற்கு மனித உரிமை அமைப்புகள் கண்டனம் தெரிவித்துள்ளன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஜூபிலி ஹில்ஸ் தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு!

கரூர் எல்லையில் காவல்துறை வரவேற்றது ஏன்? -Aadhav Arjuna கேள்வி

டெக்சாஸில் வாகனங்கள் மீது விழுந்து தீப்பிடித்த விமானம்!

பிணைக் கைதிகள் 7 பேரை விடுவித்த ஹமாஸ்! இஸ்ரேல் உற்சாக வரவேற்பு!!

இருமல் மருந்து விவகாரம்: தமிழகத்தில் மருந்து நிறுவனங்களில் ஆய்வு செய்ய உத்தரவு

SCROLL FOR NEXT