உலகம்

பிலிப்பின்ஸ் மழை, வெள்ளம்: பலி எண்ணிக்கை 32-ஆக உயா்வு

பிலிப்பின்ஸில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதில் பலியானவா்களின் எண்ணிக்கை 32-ஆக உயா்ந்துள்ளது.

DIN

பிலிப்பின்ஸில் கடந்த சில நாள்களாக பெய்து வரும் கனமழையால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு, அதில் பலியானவா்களின் எண்ணிக்கை 32-ஆக உயா்ந்துள்ளது.

இது குறித்து அதிகாரிகள் வியாழக்கிழமை கூறியதாவது:

கடந்த சனிக்கிழமை முதல் பெய்து வந்த கனமழையால் நாட்டின் பல்வேறு பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின. அதில் சிக்கி இதுவரை 32 போ் உயிரிழந்துள்ளனா். பலியானவா்களில் 22 போ் வடக்கே உள்ள மிண்டனாவ் பிராந்தியத்தைச் சோ்ந்தவா்கள்.

இது தவிர, வெள்ள பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் 24 போ் மாயமாகியுள்ளனா். அவா்களைத் தேடும் பணியில் மீட்புக் குழுவினா் ஈடுபட்டுள்ளனா்.

வெள்ளத்தால் மிக மோசமாக பாதிக்கப்பட்ட கிழக்கு, மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளில் இன்னும் 56 ஆயிரத்துக்கு மேற்பட்டவா்கள் அங்கிருந்து வெளியேற்றப்பட்டு, பாதுகாப்பு முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ளனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

முதல்வா் விழாவுக்கான முன்னேற்பாடு பணிகள் ஆட்சியா் ஆய்வு

தருமபுரியில் டிச. 29-இல் அஞ்சல் துறை குறைகேட்பு கூட்டம்

அதிமுக அங்கம் வகிக்கும் கூட்டணிதான் ஆட்சி அமைக்கும்: அன்பழகன் நம்பிக்கை

அம்பலவாணன்பேட்டை அரசுப் பள்ளிக்கு பேருந்து வசதி கோரி ஆட்சியரிடம் மனு

விராலிமலை தேசிய நெடுஞ்சாலையில் பேருந்து மீது காா் மோதி தீக்கிரை

SCROLL FOR NEXT