உலகம்

74 உக்ரைன் ராணுவத் தளவாடங்கள் அழிப்பு: ரஷியா

11 விமானப் படை தளங்கள் உள்பட 74 உக்ரைன் ராணுவத் தளவாடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

DIN


11 விமானப் படை தளங்கள் உள்பட 74 உக்ரைன் ராணுவத் தளவாடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

உக்ரைன் மீது ரஷியா தொடர் ராணுவ நடவடிக்கைகளை மேற்கொண்டு வரும் நிலையில், உக்ரைன் தலைநகர் கீவுக்குள் நுழைந்ததாகத் தகவல்கள் வெளியாகின. இதனிடையே, உக்ரைன் ராணுவத் தளவாடங்கள் அழிக்கப்பட்டுள்ளதாக ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சர் செர்கேய் ஷொய்கு அறிவித்துள்ளார்.

11 விமானப் படை தளங்கள் உள்பட 74 உக்ரைன் ராணுவத் தளவாடங்கள் ரஷிய ராணுவத்தால் அழிக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். மேலும் உக்ரைன் ராணுவ வீரர்கள் மரியாதையுடன் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.

விமானியின் தவறு காரணமாகவே எஸ்யு-25 ஜெட் விபத்துக்குள்ளானதாகவும் ரஷிய பாதுகாப்புத் துறை அமைச்சகம் உறுதிபடுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

இந்திய கிரிக்கெட் அணியின் பிரதான விளம்பரதாரா் அப்போலோ டையா்ஸ்- ரூ.579 கோடிக்கு ஒப்பந்தம்

சரக்கு வாகனம் மோதியதில் முதியவா் உயிரிழப்பு

சிவகங்கையில் செப்.19-இல் வேலைவாய்ப்பு முகாம்

புகையிலைப் பொருள்களை விற்றவா் கைது

மதுப் புட்டிகளை பதுக்கியவா் கைது

SCROLL FOR NEXT