முகப்பு
உலகம்

உக்ரைனில் ராணுவச் சட்டம் அமல்: அதிபர் அறிவிப்பு

ரஷியாவின் போர் அறிவிப்பை அடுத்து, உக்ரைனில் ராணுவச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக உக்ரைன் அதிபர் அறிவித்துள்ளார். 

Updated On : 24 பிப்ரவரி, 2022 at 1:40 PM
பகிர்:

ரஷியாவின் போர் அறிவிப்பை அடுத்து, உக்ரைனில் ராணுவச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக உக்ரைன் அதிபர் அறிவித்துள்ளார். 

நேட்டோ ராணுவ அமைப்பில் உக்ரைன் இணைவதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா, உக்ரைன் மீது போர்த் தாக்குதலை தொடங்கியுள்ளது. உக்ரைன் மீது ராணுவ நடவடிக்கைளை மேற்கொள்ள ரஷிய அதிபர் விளாதிமிர் புதின் வியாழக்கிழமை உத்தரவிட்டதை அடுத்து, ரஷியப் படைகள், உக்ரைனில் போர் தொடுக்கத் தொடங்கியுள்ளன. இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.

ரஷியா - உக்ரைன் போர் குறித்து அமெரிக்கா, இந்தியா உள்ளிட்ட உலக நாடுகள் கவலை தெரிவித்ததுடன் போரை நிறுத்தவும் வலியுறுத்தி வருகின்றன. 

Advertisement

ரஷியாவின் போர் அறிவிப்பை அடுத்து, உக்ரைனில் ராணுவச் சட்டம் அமல்படுத்தப்படுவதாக உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென்ஸ்கி அறிவித்துள்ளார். 

ராணுவச் சட்டத்தின்படி, உக்ரைனில் பொதுக்கூட்டங்கள், மக்கள் கூடுவது அரசியல் கட்சிகள் மீதான தடைகள், இயக்கங்களுக்குத் தடை உள்ளிட்ட கடுமையான கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.