உலகம்

ஆப்கனில் 8 போலியோ பணியாளர்கள் கொலை: ஐ.நா. கண்டனம்

DIN

காபூல்: வடக்கு ஆப்கனில் போலியோ தடுப்பூசி போடும் சுகாதாரப் பணியாளர்கள் 8 பேர் கொல்லப்பட்டதற்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் மீண்டும் நோய்த்தடுப்பு பிரசாரங்கள் தொடங்கிய பின்னர் நடைபெற்ற முதல் தாக்குதல் இதுவாகும்.

தகார் மாகாணத்தில் உள்ள தலோகான் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் போக்குவரத்துக் குழுவைச் சேர்ந்த பணியாளர் ஒருவர் கொல்லப்பட்டார், அதே சமயம் குண்டூஸ் நகரில் வீட்டுக்கு வீடு அணியாகச் சென்று தடுப்பூசி போடும் பணியாளர்கள் 4 பேர் இரண்டு வெவ்வேறு சம்பவங்களில் கொல்லப்பட்டதாக ஐ.நா தெரிவித்துள்ளது. 

குண்டூஸ் மாகாணத்தின் எமாம்சாஹேப் மாவட்டத்தில் தடுப்பூசி போடும் பணியாளர்கள் 2 பேரும், ஒரு சமூக ஆர்வலரும் கொல்லப்பட்டுள்ளனர்.

இந்த மனிதாபிமானமற்ற செயலுக்கு ஐ.நா. கண்டனம் தெரிவித்துள்ளது.

சுகாதாரப் பணியாளர்கள் கொல்லப்பட்டதற்கு கண்டனம் தெரிவித்துள்ள ஆப்கானிஸ்தானுக்கான பொதுச் செயலாளரின் துணை சிறப்புப் பிரதிநிதி ரமிஸ் அலக்பரோவ்,  இந்த தாக்குதல்கள் மற்றும் படுகொலைகள் சர்வதேச மனிதாபிமான சட்டத்தை மீறிய செயல் என்று கூறியுள்ளார்.

உலக சுகாதார அமைப்பின் தலைவர் டெட்ரோஸ் அதானோம் கேப்ரிரேயஸ், சுகாதாரப் பணியாளர்கள் கொலை கண்டிக்கத்தக்கது. உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு தனது ஆழ்ந்த இரங்கலையும், அதிர்ச்சியையும் தெரிவித்துள்ளார். 

கடந்த ஆண்டு, தேசிய போலியோ தடுப்பூசி பிரசாரத்தின் போது ஒன்பது போலியோ பணியாளர்கள் கொல்லப்பட்டது நினைவில்கொள்ளத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சௌதி அரேபியாவை புரட்டிப்போட்ட கனமழை - விடியோ

சிலிண்டர் வெடிப்பு: 3 குழந்தைகள் உள்பட நான்கு பேர் பலி!

கல்குவாரியில் வெடி விபத்தில் 3 பேர் பலி: முதல்வர் ஸ்டாலின் இரங்கல்

சிஎஸ்கேவின் இளம் அதிரடி வீரருக்கு அறிவுரை வழங்கிய தோனி!

கல்குவாரியில் வெடி விபத்து: உரிமையாளர் காவல்நிலையத்தில் சரண்

SCROLL FOR NEXT