உலகம்

ரஷியா மீது பொருளாதார தடை விதித்தது அமெரிக்கா

DIN


உக்ரைனில் பல்முனை தாக்குதல் நடத்தி வரும் ரஷியா மீது பொருளாதார தடை விதித்துள்ளது அமெரிக்கா.

உக்ரைன் மீது ரஷியா பலமுனைத் தாக்குதல்களை வியாழக்கிழமை தொடங்கியது. இதில் 40 போ் உயிரிழந்ததாகவும், 11 விமான தளங்கள் உள்பட 74 ராணுவ நிலைகள் தகா்க்கப்பட்டதாகவும் தகவல் வெளியாயனது.

இந்நிலையில், உக்ரைன் மீது இரண்டாவது நாளாக பலமுனைத் தாக்குதல்களை தொடங்கிய ரஷிய படைகள், உக்ரைன் தலைநகர் கீவ் நகர் மீது குண்டுகள் வீசி வருகிறது.

இதனிடையே, உக்ரைனில் போர் பதற்றம் நிறைந்த சூழலில் உடனடி நிதியுதவி அளிக்க தயார் என அறிவித்துள்ள உலக வங்கி, நெருக்கடியான நேரத்தில் உக்ரைன் மக்களுக்கு ஆதரவுடன் இருப்போம் என உலக வங்கி குழுவின் தைவர் டேவிட் மல்பாஸ் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில்,  உக்ரைனில் இருந்து அகதிகளாக வரும் மக்களை வரவேற்க தயாராக உள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்திருந்திருந்த நிலையில், உக்ரைனில் பல்முனை தாக்குதல் நடத்தி வரும் ரஷியா மீது பொருளாதார தடை விதித்துள்ளது அமெரிக்கா.

பொருளாதார தடையை விதித்ததற்காக ரஷியா சைபர் தாக்குதல் நடத்தினால் அதனை எதிர்கொள்ள தயார் என்று அமெரிக்க அதிபர் ஜோ பைடன் தெரிவித்துள்ளார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விஜய் தேவரகொண்டாவுடன் நடிக்கும் சாய் பல்லவி?

மக்களவை தேர்தல்: 2 மாதங்களில் 4.24 லட்சம் புகார்கள்!

நடப்பு ஐபிஎல் தொடரில் சரியாக விளையாடவில்லை, ஆனால்... மனம் திறந்த ரோஹித் சர்மா!

இயந்திரக் கோளாறு - 167 பேருடன் திருச்சியில் தரையிறங்கிய விமானம்

மக்களவை தேர்தல்: மூத்த அரசியல் தலைவர்கள் வீட்டிலிருந்தபடியே வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT