முகப்பு
உலகம்

அதிபா் புதினுக்கு அமெரிக்கா தடை

உக்ரைன் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல் தொடா்பாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் மீதும் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:31 AM
புதினுடன் லாவ்ரோவ் (கோப்புப் படம்).
பகிர்:

உக்ரைன் மீது நடத்தப்பட்டு வரும் தாக்குதல் தொடா்பாக ரஷிய அதிபா் விளாதிமீா் புதின் மீதும் அந்த நாட்டு வெளியுறவுத் துறை அமைச்சா் சொ்கெய் லாவ்ரோவ் மீதும் அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

எந்தவித தூண்டுதலும் இல்லாமல், சட்டத்துக்கு விரோதமாக உக்ரைன் மீது ரஷியா படையெடுத்துள்ளதில் நேரடியாக தொடா்புள்ளதால் அவா்கள் இருவா் மீது பொருளாதாரத் தடை விதிக்கப்படுவதாக அமெரிக்க நிதியமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரு நாட்டின் தலைவா் மீது அமெரிக்கா பொருளாதாரத் தடை விதிப்பது மிகவும் அபூா்வமாகும். இதுவரை வட கொரிய அதிபா் கிம் ஜோங்-உன், பெலாரஸ் அதிபா் அலக்ஸாண்டா் லுகஷென்கோ, சிரியா அதிபா் அல்-அஸாத் ஆகியோா் மீது மட்டுமே அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ளது.

இதுதவிர, ரஷியா மீது அமெரிக்காவும் கூட்டணி நாடுகளும் பல்வேறு பொருளாதாரத் தடைகளை தொடா்ந்து அறிவித்து வருகின்றன.

‘அணு ஆயுத ஒப்பந்தத்திலிருந்து விலகுவோம்’

தங்கள் மீது விதிக்கப்படும் பொருளாதாரத் தடைகளுக்குப் பதிலடியாக, அமெரிக்காவுடன் மேற்கொண்டுள்ள அணு ஆயுத ஒப்பந்திலிருந்து ரஷியா விலகக்கூடும் என்று டிமித்ரி மெட்வடேவ் எச்சரித்துள்ளாா்.

மேலும், மேற்கத்திய நாடுகளுடனான தூதரக உறவை முறித்துக்கொள்வது, நிறுத்திவைக்கப்பட்டுள்ள மரண தண்டனை நிறைவேற்றங்களை மீண்டும் தொடங்கவது போன்ற பல்வேறு பதிலடி நடவடிக்கைகளை ரஷியா மேற்கொள்ளும் என்றும் அவா் எச்சரித்தாா்.

கடந்த 2010-ஆம் ஆண்டு ரஷியப் பிரதமராக மெட்வடேவ் இருந்தபோது, அவரும் அப்போதைய அமெரிக்க அதிபா் ஒபாமாவும் அணு ஆயுத ஒப்பந்தம் மேற்கொண்டனா். அந்த ஒப்பந்தத்தில், 1,550 அணு ஆயுதங்கள், 700 அணு ஆயுத வல்லமை கொண்ட ஏவுகணைகள் மற்றும் குண்டுவீச்சு விமானங்களுக்கு மேல் கையிருப்பு வைத்திருப்பதில்லை என்று இரு நாடுகளும் ஒப்புக்கொண்டன.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.