முகப்பு
உலகம்

இந்தியாவிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை; கெடுபிடி விதிக்கும் ஹாங்காங்

கரோனா தடுப்பு நடவடிக்கையாக பார்கள், உடற் பயிற்சி மையங்கள் ஆகிவை மூடப்படவுள்ளது. அதேபோல, மாலை நேரங்களில் உணவகங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

Updated On : 5 ஜனவரி, 2022 at 3:39 PM
கோப்புப்படம்
பகிர்:

ஒமைக்ரான் பரவல் அதிகரித்துவரும் நிலையில், இந்தியா உள்பட எட்டு நாடுகளிலிருந்து வரும் விமானங்களுக்கு தடை விதித்து ஹாங்காங் அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கரோனா தடுப்பு நடவடிக்கையாக பார்கள், உடற் பயிற்சி மையங்கள் ஆகிவை மூடப்படவுள்ளது. அதேபோல, மாலை நேரங்களில் உணவகங்கள் செயல்பட தடை விதிக்கப்பட்டுள்ளது.

ஹாங்காங், சர்வதேச அளவில் பொருளாதார மையமாக விளங்கிவருகிறது. தற்போது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள், பொருளாதார ரீதியாக பெரும் தாக்கத்தை ஏற்படுத்தவுள்ளது. முன்னதாக, பூஜ்ய கரோனா திட்டத்தை செயல்படுத்தியதால், அங்கு பாதிப்பு குறைவாக இருந்தது. ஆனால், உலகின் மற்ற பகுதிகளிலிருந்து ஹாங்காங் மக்கள் முற்றிலுமாக தனிமைப்படுத்தப்பட்டிருந்தனர்.

எல்லைப் பகுதிகளை முற்றிலுமாக மூடுதல், வாரம் முழுவதும் தனிப்படுத்தும் விதிகள் அமல், குறிப்பிட்ட பகுதிகளில் ஊரடங்கு விதிப்பு, பெரிய அளவில் கரோனா சோதனை மேற்கொள்வது என சீனாவை போலவே, பெருந்தொற்றை கட்டுப்படுத்த ஹாங்காங்கில் கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.

Advertisement

இந்நிலையில், ஹாங்காங்கில் செவ்வாய்கிழமை மட்டும் 114 பேருக்கு ஒமைக்ரான் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. அதில் பெரும்பான்மையானோர் விமான நிலையங்களில் 21 நாள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டவர்கள் ஆவர். கேத்தே பசிபிக் விமான நிறுவன ஊழியரிடமிருந்து கரோனா பரவியதன் காரணமாக கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

இதுகுறித்து கேத்தே பசிபிக் விமான நிறுவனத்தின் தலைமை செயல் அலுவலர் கேரி லாம் கூறுகையில், "உள்ளூர் மக்கள் மத்தியில் பரவல் தன்மை அதிகம் கொண்ட கரோனா அமைதியாக பரவிவருவதாக சுகாதார அலுவலர்கள் அச்சம் கொண்டுள்ளனர். வைரஸ் எங்கிருந்து பரவுகிறது என்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஆனால், எப்படி பரவுகிறது என்பது கண்டுபிடிக்க முடியவில்லை" என்றார்.

இதனிடையே, ஆஸ்திரேலியா, கனடா, பிரான்ஸ், இந்தியா, பாகிஸ்தான், பிலிப்பைன்ஸ், இங்கிலாந்து மற்றும் அமெரிக்காவிலிருந்து வரும் விமானங்களுக்கு சனிக்கிழமை நள்ளிரவு முதல் இரண்டு வாரங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.