வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியிருப்பதாக ஜப்பான் மற்றும் தென்கொரியா தெரிவித்துள்ளது.
வடகொரிய நாடானது அவ்வப்போது நடத்திவரும் ஏவுகணை சோதனை அண்டை நாடுகளில் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. பன்னாட்டு அமைப்புகள் மற்றும் அண்டை நாடுகளின் எச்சரிக்கைகளையும் கண்டுகொள்ளாமல் வடகொரியா மேற்கொண்டு வரும் இந்த ஏவுகணை சோதனையால் அரசியல் பரபரப்பு நீடித்து வருகிறது.
இதையும் படிக்க | நாளையுடன் (ஜன.6) நிறைவடைகிறது 19ஆவது சென்னை சர்வதேச திரைப்பட விழா
இந்நிலையில் புதன்கிழமை வடகொரியாவின் கிழக்கு கடற்பகுதியில் அதிநவீன பாலிஸ்டிக் வகை ஏவுகணையை சோதனை செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 மாத இடைவெளிக்கு வடகொரியா மேற்கொண்டுள்ள ஏவுகணை சோதனை இதுவாகும்.
வடகொரியாவின் இந்த ஏவுகணை சோதனை குறித்து அண்டை நாடான ஜப்பான் மற்றும் தென்கொரியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | தமிழகத்தில் ஞாயிறு, இரவுநேர முழு ஊரடங்கு
இந்த ஏவுகணை சோதனை மூலம் கொரிய தீபகற்ப பகுதியில் வடகொரியா பதற்றத்தை ஏற்படுத்தி வருவதாகத் தெரிவித்துள்ள ஜப்பான் மற்றும் தென்கொரியா ஆகிய நாடுகள் வடகொரியா அணுசக்தி பயன்பாடு குறித்த பேச்சுவார்த்தைக்கு தயாராக இல்லை என்பதை இந்த ஏவுகணை சோதனை காட்டுவதாக குறிப்பிட்டுள்ளது.
இருப்பினும் ஏவுகணை சோதனை குறித்து எந்தவிவரங்களையும் இதுவரை வடகொரியா வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.