முகப்பு
உலகம்

பாகிஸ்தான்: முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி விரைவில் நியமனம்

பாகிஸ்தான் நாட்டில் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி நியமிக்கப்பட உள்ளார்

Updated On : 7 ஜனவரி, 2022 at 1:17 PM
ஆயிஷா மாலிக்
பகிர்:

பாகிஸ்தான் நாட்டில் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி நியமிக்கப்பட உள்ளார்.

சுதந்திரம் அடைந்ததிலிருந்து பாகிஸ்தான் நாட்டின் உச்சநீதிமன்றத்தில் ஆண் நீதிபதிகளே நியமிக்கப்பட்டுவந்த நிலையில் முதல்முறையாக ஆயிஷா மாலிக் என்கிற பெண் நீதிபதியை நியமிக்க அந்நாட்டின் சட்ட கமிஷன் ஒப்புதல் அளித்துள்ளது.

55 வயதான ஆயிஷா மாலிக் தற்போது லாகூர் நீதிமன்றத்தின் நீதிபதியாக செயல்பட்டு வருகிறார். கடந்த முறையே உச்சநீதிமன்றத்தின் நீதிபதி தேர்வுப்பட்டியலில் ஆயிஷா இருந்தார். ஆனால், மற்ற நீதிபதிகளைக் காட்டிலும் குறைவான வயதுடையவரை ஏற்க முடியாது என வழக்கறிஞர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். 

Advertisement

இருப்பினும், இம்முறையும் ஆயிஷா மாலிக் உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதிபதியாக பரிந்துரை செய்யப்பட்டுள்ளார்.

இதனால், விரைவில் பாகிஸ்தானில் முதல் பெண் உச்சநீதிமன்ற நீதிபதி பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.