உலகம்

உலகளவில் கரோனா பாதிப்பு 30 கோடியாக உயர்வு

DIN

உலகம் முழுவதும் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 30 கோடியைக் கடந்துள்ளது. பலி எண்ணிக்கை 5.48 லட்சத்தை கடந்துள்ளது.  

உலகம் முழுவதும் கரோனா தொற்றின் அடுத்தடுத்த அலைகளினால் ஒட்டுமொத்த பாதிப்பு அதிகரித்த வண்ணமே இருக்கிறது. தொற்றைக் கட்டுப்படுத்த கட்டுப்பாடுகளுடன் தடுப்பூசிகள் செலுத்தும் பணிகள் தீவிரப்படுத்தி வந்ததாலும் தொற்று பாதிப்பு அதிகரித்தே வருகின்றன. 

கடந்த ஆண்டு இறுதியில் தென்னாப்பிரிக்காவில் கண்டறியப்பட்ட ஒமைக்ரான் என்ற உருமாறிய கரோனா தொற்று தற்போது உலகம் முழுவதும் பரவத்தொடங்கி அச்சமடைய வைத்துள்ளது.

இந்நிலையில், உலகம் முழுவதும் கரோனா பாதித்தோர் எண்ணிக்கை 30,00,95,481-ஆக அதிகரித்துள்ளது. அவா்களில் 54,82,253 போ் உயிரிழந்துள்ளனர். 

மேலும், தொற்று பாதிப்பில் இருந்து இதுவரை 25,68,15,586 போ் பூரண குணமடைந்துள்ளனர். சுமாா் 3,59,91,937 போ் தொடா்ந்து சிகிச்சை பெற்று வருகின்றனா். அவர்களில் 91,970 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது.

உலகிலேயே மிகவும் மோசமான பாதிப்புக்குள்ளான அமெரிக்‍காவில் இதுவரை தொற்று பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 5,84,87,665 ஆகவும் பலி எண்ணிக்கை 8,33,987 ஆகவும் உயர்ந்துள்ளது. 

இரண்டாவது இடத்தில் உள்ள இந்தியாவில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 3,51,09,286-ஆக உயர்ந்துள்ளது. இதுவரை 4,82,876 பேர் பலியாகியுள்ளனர்.

தொற்று பாதிப்பில் மூன்றாவது இடத்தில் உள்ள பிரேசிலில் பாதிக்கப்பட்டோர் எண்ணிக்‍கை 2,23,28,252-ஆகவும் பலிகளைப் பொருத்தவரை 6,19,654 பேருடன் இரண்டாவது இடத்திலும் உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மேற்கு வங்கத்தில் 25,000 ஆசிரியா்கள் நியமனம் ரத்து: உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை

மழை வேண்டி கோனியம்மன் கோயிலில் சிறப்பு பிராா்த்தனை

கோவை, திருப்பூரை வறட்சி பாதித்த மாவட்டங்களாக அறிவிக்க கோரிக்கை

அரசு உதவி பெறும் கல்லூரிகளிலும் ஒற்றைச்சாளர முறையை அமல்படுத்த கோரிக்கை

வேளாண் பல்கலை.யில் பட்ட மேற்படிப்பு, பட்டயப் படிப்புக்கு விண்ணப்பிக்கலாம்

SCROLL FOR NEXT