உலகம்

ஸ்டீபன் ஹாக்கிங் பிறந்தநாள்: சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரம் வெளியிட்டு கௌரவித்த கூகுள்!

DIN

இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங்கின் பிறந்தநாளையொட்டி பிரபல தேடுபொறி நிறுவனமான கூகுள், சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டுள்ளது. 

ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் ஒரு இயற்பியலாளர். இரண்டாம் உலகப் போரின்போது இங்கிலாந்திலுள்ள ஆக்ஸ்போர்டில் 1942, ஜன. 8ல் பிறந்தார். அண்டவெளியின் தோற்றத்தையும், அதன் பரிணாம வளர்ச்சியையும் பற்றி ஆராய்ந்து மகத்தான கண்டுபிடிப்புகளை வெளியிட்டவர்.

அண்டவியல் (cosmology), குவாண்டம் ஈர்ப்பு(quantum gravity), கருங்குழி (black holes) வெப்ப இயக்கவியல் குறித்த இவரது ஆய்வுக் கட்டுரைகள் அறிவியலுக்கு முக்கியப் பங்களிப்பு. 

ஸ்டீபன் ஹாக்கிங் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகத்தில் கணிதவியலில் லூக்காசியன் பேராசிரியராக பணிபுரிந்தார். அந்த பல்கலைக்கழகத்தில் 1979-இல் பணிக்கு சேர்ந்த ஸ்டீபன் ஹாக்கிங், அங்கு சுமார் 30 ஆண்டுக்காலம் பணியாற்றினார். பின்னர் தனது 67-ஆம் வயதில், 2009-இல் பணி மூப்பு பெற்றார். 

21 வயதிலேயே அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis,) என்னும் குணப்படுத்த முடியாத நரம்பு நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு, கை, கால் முதலிய உடலியக்கங்களும் பாதிக்கப்பட்டு, பேச்சற்ற நிலையிலும் தொழில்நுட்ப உதவியுடன் தன்னுடைய பணிகளைச் செய்து வந்தார். 

அறிவியல் துறையில் குறிப்பாக இயற்பியலில் அளப்பரிய சாதனைகளை படைத்த ஸ்டீபன் வில்லியம் ஹாக்கிங் 2018 மார்ச் 14 ஆம் தேதி மறைந்தார். 

ஸ்டீபன் ஹாக்கிங்கின் 84 ஆவது பிறந்தநாள் இன்று. அவரை நினைவுகூறும் பொருட்டு, சிறப்பு கவன ஈர்ப்புச் சித்திரத்தை வெளியிட்டு சிறப்பித்துள்ளது கூகுள் நிறுவனம். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

பாகிஸ்தான் பேருந்து விபத்தில் 20 பேர் பலி

தங்கத்தின் விலை ஒரே நாளில் ரூ.800 குறைந்தது

துரித உணவில் பூச்சிக்கொல்லி மருந்து கலந்து கொடுத்து தாத்தாவை கொன்ற மாணவர் கைது: தாய் கவலைக்கிடம்

ரேபரேலியில் ராகுல் காந்தி, அமேதியில் கிஷோரி லால் ஷர்மா போட்டி!

SCROLL FOR NEXT