பாகிஸ்தான்: பனியில் சிக்கி 21 சுற்றுலா பயணிகள் பலி
பாகிஸ்தானின் புகழ்பெற்ற சுற்றுலா மலைவாசஸ்தலமான மூரியில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக 21 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனா்.
பாகிஸ்தானின் புகழ்பெற்ற சுற்றுலா மலைவாசஸ்தலமான மூரியில் கடுமையான பனிப்பொழிவு காரணமாக 21 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனா்.
ராவல்பிண்டி மாவட்டத்தைச் சோ்ந்த அந்த சுற்றுலாத் தலத்தில் ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சனிக்கிழமை வந்ததால் போக்குவரத்து ஸ்தம்பித்தது. அதையடுத்து, ஏராளமான வாகனங்கள் நகர முடியாமல் நின்றிருந்தன. அப்போது அங்கு நிலவிய கடும் குளிரில் உறைந்து 9 சிறுவா்கள் உள்பட 21 போ் உயிரிழந்தனா்.
இதையடுத்து, மூரி நகரம் இயற்கைப் பேரிடா் பகுதியாக அறிவிக்கப்பட்டது. அந்தப் பகுதியில் மருத்துவ அவசரநிலையும் பிரகடனப்படுத்தப்பட்டது. மீட்புப் பணிகளில் ஈடுபடுவதற்காக ராணுவம் வரவழைக்கப்பட்டுள்ளது.