உலகம்

மேற்கு சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

PTI

மேற்கு சீனாவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 

மக்கள்தொகை குறைவாக உள்ள கிங்காய் மாகாணத்தில் உள்ள மென்யுவான் தன்னாட்சி ஹுய் பகுதியில் இன்று அதிகாலை 1.45 மணியளவில் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இது ரிக்டர் அளவில் 6.9 ஆகவும், இதன் ஆழம் 10 கி.மீட்டரிலும் பதிவாகியுள்ளது.

மாகாணத் தலைநகரான ஜினிங்கிலிருந்து வடமேற்கே 140 கிலோமீட்டர் (85 மைல்) தொலைவில் கடல் மட்டத்திலிருந்து 3,659 மீட்டர் (12,000 அடி) உயரத்தில் உள்ள மலைப் பகுதியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கத்தால் சில இடங்களில் பாதிப்புகள் உணரப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், கிங்காய் மற்றும் அண்டை மாநிலமான கன்சு மாகாணத்தில் உள்ள மீட்பு மற்றும் தீயணைப்புக் குழுக்கள் அனுப்பியுள்ளதாக சீன அவசர மேலாண்மை அமைச்சகம் தகவல்கள் தெரிவித்துள்ளது. 

மேலும் 2,260 மீட்புப் பணியாளர்கள் தயார் நிலையில் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மூத்த பத்திரிகையாளர் ஐ.சண்முகநாதன் மறைவு: மு.க.ஸ்டாலின் இரங்கல்

1000க்கும் அதிகமான திரைகளில் ‘நடிகர்’ திரைப்படம்!

“நான் முதல்வன்” திட்டம் - முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்

கறுப்புப் பூனை...!

ரே பரேலியில் ராகுல் காந்தி வேட்புமனுத் தாக்கல்!

SCROLL FOR NEXT