ஒரே வாரத்தில் இரண்டாவது முறையாக வடகொரியா ஏவுகணை சோதனை
ஒரே வாரத்தில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது அப்பகுதியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
ஒரே வாரத்தில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை நடத்தியிருப்பது அப்பகுதியில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
வடகொரிய நாடானது அவ்வப்போது நடத்திவரும் ஏவுகணை சோதனை அண்டை நாடுகளில் பரபரப்பைக் கிளப்பி வருகிறது. உலக நாடுகளின் எச்சரிக்கைகளையும் மீறி வடகொரியா மேற்கொண்டு வரும் இந்த ஏவுகணை சோதனையால் அரசியல் பரபரப்பு நீடித்து வருகிறது.
இதையும் படிக்க | ஆங் சான் சூகிக்கு மேலும் 4 ஆண்டுகள் சிறை
கடந்த 5ஆம் தேதி புதன்கிழமை வடகொரியாவின் கிழக்கு கடற்பகுதியில் அதிநவீன பாலிஸ்டிக் வகை ஏவுகணையை வடகொரியா சோதனை செய்தது.
இந்நிலையில் வடகொரியா மீண்டும் ஏவுகணை சோதனை மேற்கொண்டுள்ளது. கிழக்கு கடற்கரைப் பரப்பில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஏவுகணை சோதனை குறித்து ஜப்பான் கவலை தெரிவித்துள்ளது.
இதையும் படிக்க | மனிதருக்கு பன்றியின் இதயத்தைப் பொருத்தி அமெரிக்க மருத்துவர்கள் சாதனை
வடகொரியாவின் தொடர் ஏவுகணை சோதனைக்கு அமெரிக்கா, பிரான்ஸ், அயர்லாந்து, பிரிட்டன் மற்றும் அல்பேனியா உள்ளிட்ட நாடுகள் ஏவுகணை சோதனையைத் தவிர்க்க வேண்டுகோள் விடுத்துள்ளன.
ஒரேவாரத்தில் இரண்டாவது முறையாக வடகொரியா மேற்கொண்டுள்ள ஏவுகணை சோதனை அப்பிராந்தியத்தில் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.
இருப்பினும் ஏவுகணை சோதனை குறித்து எந்தவிவரங்களையும் இதுவரை வடகொரியா வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.