கோப்புப்படம் 
உலகம்

என்னாது இன்னொரு கரோனாவா...பிரிட்டனை அச்சுறுத்தும் புதிய வைரஸ்

பிரிட்டன் நாட்டில் ஒமைக்ரான் கரோனாவிலிருந்து இருந்து புதிய உருமாறிய கரோனா வகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

DIN

உலகம் முழுவதும் ஒமைக்ரான் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்திவருகிறது. இதை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு நாடுகளில் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. டெல்டா, ஒமைக்ரான என உருமாறும் தன்மை கொண்ட கரோனா, விஞ்ஞான உலகுக்கே சவால் விடுத்துவருகிறது.

இந்நிலையில், பிரிட்டன் நாட்டில் ஒமைக்ரான் கரோனாவிலிருந்து இருந்து புதிய உருமாறிய கரோனா வகை ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக அந்நாட்டு ஆய்வாளர்கள் தீவிர ஆய்வில் இறங்கியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. 

பிஏ.2 அல்லது ஸ்டெல்த் கரோனா எனப்படும் இந்த உருமாறிய கரோனாவில் உள்ள மாறுபாடுகள் ஒமைக்ரான் போல இல்லை என்பதால் டெல்டாவில் இருந்து இதை எளிதாகக் கண்டுபிடிக்க முடியவில்லை என ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

இருப்பினும், இதுவரை இந்த பிஏ.2 உருமாறிய கரோனாவை ஆய்வாளர்கள் கவலைக்குரிய கரோனா வகையாகப் பட்டியலிடவில்லை. பிரிட்டன் நாட்டில் மட்டும் சுமார் 426 பேருக்கு இந்த புதிய கரோனா பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. அதேபோல, டென்மார்க், சுவீடன், சிங்கப்பூர் நாடுகளிலும் இந்த புதிய கரோனா கண்டறியப்பட்டுள்ளது. 

இந்தியாவிலும் கூட சிலருக்கு இந்த புதிய கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக டென்மார்க் நாட்டில் தற்போது உறுதி செய்யப்படுவோரில் சுமார் 45% பேருக்கு இந்த கரோனா கண்டறியப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனால் அங்கு பரவல் வேகம் அதிகரித்துள்ளதாகவும் டென்மார்க் தெரிவித்துள்ளது. ஒட்டுமொத்தமாக சுமார் 40 நாடுகளில் இந்த புதிய கரோனா கண்டறியப்பட்டுள்ளதாக ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

நேர்காணலால் வைரலான மராத்திய நடிகை..! மார்பிங் படங்களால் வேதனை!

கதவோரக் கவிதை... அம்மு அபிராமி!

பாலஸ்தீன மூத்த அதிகாரிகள் கொல்லப்பட வேண்டும்: இஸ்ரேல் அமைச்சர் சர்ச்சைப் பேச்சு!

ஜீன்ஸ்... ஜீன்ஸ்... சோபிதா துலிபாலா!

வெளிச்சப் பூவே... ஸ்ரீதேவி அசோக்!

SCROLL FOR NEXT