இஸ்லாமியர்களின் புனித தலமான மெக்காவில் நடைபெறும் சொற்பொழிவுகள் இனி தமிழ் மொழியிலும் ஒலிபரப்பப்படும் என செளதி அரேபியா அரசு அறிவித்துள்ளது.
நபிகள் நாயகம் இறுதியாக அரஃபா குன்றின்மீது சொற்பொழிவாற்றிய நாளை இஸ்லாமியர்கள் புனித நாளாக கொண்டாடி வருகின்றனர்.
அதன்படி மெக்காவின் அரஃபா நாள் சொற்பொழிவு இனிமேல் தமிழிலும் மொழிபெயர்க்கப்பட்டு நேரலையாக ஒலிபரப்பப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அரஃபா நாள் சொற்பொழிவு இதற்கு முன்பு 10 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப்பட்டு வந்தது. இம்முறை ஒலிபரப்பு செய்யப்படும் மொழிகளில் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, தமிழ் மொழியில் சொற்பொழிவுகள் மொழிபெயர்க்கப்பட்டு நேரடியாக ஒலிபரப்பப்பட உள்ளது. அதோடு ஸ்பானிஷ் உள்ளிட்ட 4 மொழிகளில் ஒலிபரப்பு செய்யப்படவுள்ளது.
மெக்காவின், அரஃபா நாள் சொற்பொழிவு தமிழ் உட்பட 15 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு ஒலிபரப்பப்படும் என இஸ்லாமிய தலைவர் அல் சுதைஸ் தெரிவித்துள்ள்ளதாக அரபு நாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.