உலகம்

இலங்கையில் சட்டம் - ஒழுங்கை மீட்க ராணுவத்திற்கு உத்தரவு: ரணில் பேட்டி

DIN

இலங்கையில் சட்டம் - ஒழுங்கை மீட்டெடுக்க ராணுவம் மற்றும் காவல்துறைக்கு இடைக்கால அதிபர் ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

பொருளாதார நெருக்கடி காரணமாக மக்களின் போராட்டம் தீவிரமடைந்துள்ள நிலையில், அதிபர் அலுவலகம், அதிபர் மாளிகை, பிரதமர் மாளிகை, பிரதமர் அலுவலகம் மற்றும் அரசு அலுவலகங்களை போராட்டக்காரர்கள் கைப்பற்றியுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, இலங்கை முழுவதும் அவசரநிலை பிரகடனம் செய்து ரணில் விக்கிரமசிங்க உத்தரவிட்டுள்ளார்.

இந்நிலையில் தொலைக்காட்சி மூலம் ரணில் விக்கிரமசிங்க பேசியதாவது:

“ஜனநாயகத்திற்கு எதிரான ஃபாசிச அச்சுறுத்தலை நாம் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அரசின் சொத்துக்களை அழிப்பதை அனுமதிக்க முடியாது.

அதிபர் மாளிகை, அதிபர் அலுவலகம், பிரதமர் மாளிகை திரும்ப வழங்கப்பட வேண்டும். நமது அரசியலமைப்பை கிழித்து எறியவிட முடியாது.

ஃபாசிஸ்டுகள் ஆட்சியைக் கைப்பற்ற முயற்சிக்கிறார்கள். சில முக்கிய அரசியல் தலைவர்கள் தீவிரவாதிகளுக்கு ஆதரவளிப்பதாகத் தெரிகிறது.

ராணுவத் தளபதிகள் மற்றும் காவல்துறை தலைவருக்கு சட்டம் - ஒழுங்கை நிலைநாட்டுவதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

உளவுத் துறையின் தகவல்படி, போராட்டக்காரர்களால் பிரதமர் அலுவலகம் மற்றும் நாடாளுமன்றம் முற்றுக்கையிடப் போவதாக தகவல் வெளியானது. மேலும், மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தவே அவசரநிலை பிரகடனம் செய்யப்பட்டது” என்றார்.

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச இன்று ராஜிநாமா செய்வதாக தெரிவித்த நிலையில், அதிகாலை மாலத்தீவுக்கு தப்பிச் சென்றதால் ஆத்திரமடைந்த போராட்டக்காரர்கள் கோத்தபயவுக்கு உதவிய ரணிலையும் உடனடியாக பதவி விலகக் கோரி போராட்டத்தை தீவிரப்படுத்தியுள்ளனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பேத்கர் அளித்த உரிமைகளைப் பாதுகாப்பேன்: பிரதமர் மோடி உறுதி!

பொதுமக்களுக்கு ஓஆா்எஸ் கரைசல் விநியோகம்

தொடா் திருட்டு: இளைஞா் கைது

திருக்குறள் உரை நூல் வெளியீடு

காலிக் குடங்களுடன் பொதுமக்கள் சாலை மறியல்

SCROLL FOR NEXT