உலகம்

கோத்தபய மாலத்தீவில் இருக்கிறாரா? பதில் சொல்ல மறுக்கும் வெளியுறவுத் துறை

DIN


மாலே: இலங்கையில் ஏற்பட்ட மக்கள் புரட்சியால், நாட்டை விட்டுத் தப்பியோடிய இலங்கை அதிபர் கோத்தபய ராஜபட்ச தங்கள் நாட்டில்தான் தஞ்சமடைந்திருக்கிறாரா என்ற கேள்விக்கு பதிலளிக்க மாலத்தீவின் வெளியுறவுத் துறை அமைச்சகம் மறுத்துள்ளது.

கொழும்பு சர்வதேச விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட விமானத்தில், கோத்தபய ராஜபட்ச, அவரது மனைவி மற்றும் இரண்டு பாதுகாவலர்களுடன் மாலத்தீவில் தரையிறங்கியதாகக் கூறப்படும் நிலையில், அதனை உறுதி செய்ய வெளியுறவுத் துறை மறுத்துவிட்டது.

கடுமையான பொருளாதார நெருக்கடிகளுக்கு இடையே கடந்த வார இறுதியில் இலங்கையில் மக்கள் புரட்சி வெடித்த நிலையில், புதன்கிழமை, இலங்கை அதிபர் பதவியிலிருந்து விலகுவதாக கோத்தபய ராஜபட்ச அறிவித்திருந்த நிலையில், அதற்கு முன்னதாக, தனி விமானம் மூலம் இலங்கையிலிருந்து மாலத்தீவுக்கு தப்பிடியதாக தகவல்கள் வெளியாகின.

இந்த நிலையில், இது குறித்து மாலத்தீவுகள் வெளியுறவுத் துறை அமைச்சக செய்தித் தொடர்பாளரிடம் கேட்டபோது, இது பற்றி இப்போது கருத்துக் கூறு முடியாது என்று தெரிவித்துவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

‘நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் பெரியாா் பல்கலை. மாணவா்கள் இங்கிலாந்து பயணம்

அரசுப் பள்ளியிலும், தாய்மொழியிலும் படித்துதான் சாதித்தோம் -ஆட்சியா், காவல் ஆணையா், மாநகராட்சி ஆணையா் பேச்சு

9.4 ஓவா்களில் 167 ரன்கள் விளாசி ஹைதராபாத் அபார வெற்றி!

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

தினம் தினம் திருநாளே!

SCROLL FOR NEXT