உலகம்

இலங்கை விவகாரம்: அரசியல் தலைவர்களுக்கு ஐ.நா. கோரிக்கை

DIN

போராட்டக்காரர்களின் குறைகளை சீர்செய்ய இலங்கை அரசியல் தலைவர்களுக்கு ஐ.நா. பொதுச் செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் கோரிக்கை விடுத்துள்ளார்.

இலங்கையில் பொருளாதார நெருக்கடி காரணமாக அரசுக்கு எதிராக மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அதிபர் கோத்தபய ராஜபட்ச மற்றும் இடைக்கால அதிபரும், பிரதமருமான ரணில் விக்கிரமசிங்க ஆகியோர் உடனடியாக பதவி விலக வேண்டும் என்று போராட்டத்தை தொடர்ந்து வருகின்றனர்.

இந்நிலையில், ஐ.நா. பொதுச் செயலாளர் வெளியிட்ட டிவிட்டர் பதிவில்,

“இலங்கை நிலவரத்தை தொடர்ந்து கவனித்து வருகிறேன். கலவரத்திற்கான காரணம் மற்றும் போராட்டக்காரர்களின் குறைகளை சீர்செய்வது மிகவும் முக்கியம். அமைதியான முறையில் ஜனநாயக மாற்றத்திற்கு சமரசம் செய்யுமாறு அனைத்து கட்சித் தலைவர்களையும் கேட்டுக் கொள்கிறேன்” எனத் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ராபாவில் இஸ்ரேல் நேரடித் தாக்குதல்? மக்களை இடம்பெயரக் கோரும் புதிய அறிவிப்பு!

தமிழ்நாட்டில் கோடை காலத்திலும் தடையில்லா மின் விநியோகம் -தலைமைச் செயலாளர்

பொருளின் பொருள் கவிதை

ப்ளிங்க் - சிந்திக்காமலேயே சிந்திக்கும் ஆற்றல்

பைசன் காளமாடன் படத்தின் பூஜை ஸ்டில்ஸ்

SCROLL FOR NEXT