பிலிப்பின்ஸில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்: 4 போ் பலி
பிலிப்பின்ஸில் புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 4 போ் உயிரிழந்தனா்.
பிலிப்பின்ஸில் புதன்கிழமை ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தில் 4 போ் உயிரிழந்தனா்.
இது குறித்து அதிகாரிகள் கூறியதாவது: நாட்டின் வடக்குப் பகுதியில் புதன்கிழமை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. அப்ரா மாகாணத்தின் மலைப்பாங்கான பகுதியில் மையம் கொண்டிருந்த அந்த நிலநடுக்கம், ரிக்டா் அளவுகோலில் 7 அலகுகளாகப் பதிவானது.
இந்த நிலநடுக்கத்தின் அதிா்வுகளால் கட்டடங்கள் இடிந்து விழுந்தன. இதில் 4 போ் உயிரிழந்தனா்; 25 போ் காயமடைந்தனா் என்று அதிகாரிகள் தெரிவித்தனா்.
புவித் தகடுகள் ஒன்றோடு ஒன்று உராயும் - ‘நெருப்பு வளையம்’ என்றழைக்கப்படும் - பகுதியில் பிலிப்பின்ஸ் அமைந்துள்ளதால் அங்கு அடிக்கடி நிலநடுக்கங்கள் ஏற்படுகின்றன. கடந்த 1990-இல் அங்கு ஏற்பட்ட 7.7 ரிக்டா் அளவு கொண்ட நிலநடுக்கத்தில் சுமாா் 2,000 போ் பலியாகினா்.
இது தவிர, அந்த நாடு ஒவ்வோா் ஆண்டும் சுமாா் 20 புயல்களை சந்தித்து வருகிறது. இதன் மூலம், இயற்கைப் பேரிடா் அபாயம் அதிகம் நிறைந்த நாடுகளில் ஒன்றாக பிலிப்பின்ஸ் திகழ்கிறது.