உலகம்

6000 ஆண்டுகள் இல்லாத அளவு அதிகரித்த கார்பன் செறிவு

DIN

தொழில் புரட்சிக்கு முன்னர் இருந்ததைக் காட்டிலும் 50 சதவிகிதம் அதிகமாக வளிமண்டலத்தில் கார்பன் டை ஆக்சைடின் செறிவு அதிகரித்துள்ளது. 

காலநிலை மாற்றத்திற்கு அடிப்படை காரணமாக இருப்பது வளிமண்டலத்தில் கார்பனின் செறிவு அதிகரிப்பதேயாகும். வளிமண்டலத்தில் அதிகரித்துவரும் கார்பன் செறிவால் புவியின் வெப்பநிலை உயர்வதோடு காலநிலை மாற்றத்திற்கும் அவை வித்திடுகின்றன. 

தொழிற்புரட்சி காலத்திற்கு முன் இருந்த வளிமண்டல கார்பன் செறிவானது தற்போது தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இந்நிலையில் சமீபத்தில் வெளியான அறிக்கை விஞ்ஞானிகளை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.

வளிமண்டலத்தில் கார்பனின் செறிவு கடந்த மே மாத நிலவரப்படி 419 பிபிஎம் அலகுகளாக அதிகரித்துள்ளது. இதுவே கடந்த 2020ஆம் ஆண்டு 417 பிபிஎம்-ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதுகுறித்து பேசிய காலநிலை விஞ்ஞானி பீட்டர் டான்ஸ், “காற்றில் கார்பனின் செறிவு முன்னெப்போதும் இல்லாத அளவு அதிகரித்துள்ளது ஆபத்தானது” எனத் தெரிவித்துள்ளார்.

ஐரோப்பாவில் தொடங்கிய தொழிற்புரட்சிக்கு முந்தைய காலகட்டத்தில் காற்றில் கார்பனின் செறிவு 280 பிபிம் அளவாக மட்டுமே இருந்தது. ஆனால் தற்போது 6000 ஆண்டுகள் இல்லாத அளவு கார்பனின் செறிவு வளிமண்டலத்தில் அதிகரித்துள்ளது.  கார்பனின் செறிவு அதிகரிப்பால் காலநிலை மாற்ற பாதிப்பு வேகமெடுக்கும் என விஞ்ஞானிகள் எச்சரித்து வருகின்றனர்.

அதீத மழைப்பொழிவு, அதன் காரணமாக ஏற்படும் வெள்ள பாதிப்பு, வெப்ப மற்றும் குளிர் அலைகளின் தாக்கம், புயல்களின் எண்ணிக்கை அதிகரித்தல், கடல்நீர் மட்டம் உயர்தல், அதீத வெப்பநிலை உணரப்படுதல் உள்ளிட்டவை காலநிலை மாற்றத்தின் விளைவுகளாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீட் தேர்வு தொடங்கியது!

சடலமாக மீட்கப்பட்ட மூவர்: விசாரணையில் திடுக்கிடும் தகவல்!

மணல் கடத்தலைத் தடுக்க முயன்ற காவல்துறை அதிகாரி டிராக்டர் ஏற்றிக் கொலை

காங்கிரஸ் நிர்வாகி புகாரளிக்கவில்லை- காவல்துறை மறுப்பு

பொற்கொன்றை!

SCROLL FOR NEXT