பிரேசிலில் கனமழை: பலி எண்ணிக்கை 128 ஆக உயர்வு
பிரேசிலில் பெய்த கனமழையினால் பலியானோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.
பிரேசில்: பிரேசிலில் பெய்த கனமழையினால் பலியானோர் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளது.
பிரேசிலிய மாநிலமான பெர்னாம்புகோவின் தலைநகரான ரெசிஃப் மற்றும் அதன் பெருநகரப் பகுதியில் பெய்த கனமழையால் இறந்தவர்களின் எண்ணிக்கை 128 ஆக உயர்ந்துள்ளதாக உள்ளூர் அதிகாரிகள் வெள்ளிக்கிழமை தெரிவித்தனர்.
கனமழையால் 9,300-க்கும் மேற்பட்ட மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளனர் மற்றும் 34 நகராட்சிகள் அவசரகால நிலையை அறிவித்துள்ளன என்று பெர்னாம்புகோ ஆளுநர் பாலோ கமாரா செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
Advertisement
Advertisement
பெர்னாம்புகோவில் கடந்த வாரம் முதல் கனமழை பெய்து வருகிறது. கனமழையானது இந்த வார இறுதியில் தீவிரமடைந்து, நிலச்சரிவு போன்ற சம்பவங்களில் பாதிக்கப்பட்டு 100-க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.