முகப்பு
உலகம்

ரஷியாவால் பலிகள் அதிகரிக்கும்: இங்கிலாந்து

ரஷியாவின் தாக்குதலால் உக்ரைனில் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:32 AM
ரஷியப் படையினா் (கோப்புப் படம்).
பகிர்:

ரஷியாவின் தாக்குதலால் உக்ரைனில் உயிரிழப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளதாக இங்கிலாந்து பாதுகாப்புத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

உக்ரைனில் 6வது நாளாக ரஷிய ராணுவப் படைகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகின்றன. தலைநகர் கீவ், கார்கீவ் போன்ற முக்கிய நகரங்களில் குடியிருப்புப் பகுதிகள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. 

நேட்டோ படையில் இணைந்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து உக்ரைன் மீது ரஷியா தாக்குதல் நடத்தி வருகிறது. கடந்த 24ஆம் தேதி முதல் ரஷிய ராணுவம் உக்ரைனின் பல்வேறு எல்லைப் பகுதிகள் வழியாக ஊடுருவி தாக்குதலில் ஈடுபட்டுள்ளது.

இதனால் உக்ரைன் நாட்டிலிருந்து சுமார் 1.5 லட்சம் மக்கள் அண்டை நாடுகளுக்கு அகதிகளாக தஞ்சம் அடைந்துள்ளனர். அந்நாட்டில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களும் அண்டை நாடுகளின் எல்லைகளை நோக்கி படையெடுத்துள்ளனர். 

மேலும், உக்ரைனுக்கு ஆதரவாக சில  ஐரோப்பிய நாடுகள் போர் விமானங்களைத் தரவும் முன்வந்துள்ளது.

இந்நிலையில், ரஷியப் படைகள் உக்ரைனின் வடக்கு கீவ் மற்றும் கார்கிவ் & செர்னிஹிவ் சுற்றுப்புறங்களில் பீரங்கிப் பயன்பாடுகளை அதிகரித்துள்ளன. அதிக மக்கள்தொகை கொண்ட நகர்ப்புறங்களில் கனரக பீரங்கிகளைப் பயன்படுத்துவது உயிரிழப்புகளை அதிகரிக்கச் செய்யும் என இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →