கீவ் நகரில் கார் மீது ரஷிய ஏவுகணை தாக்குதல்;  இருவர் பலி 
உலகம்

கீவ் நகரில் கார் மீது ரஷிய ஏவுகணை தாக்குதல்;  இருவர் பலி

கார் மீது ரஷிய படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் பலியாகினர். 4 பேர் காயமடைந்தனர் என்று உக்ரைன் நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

IANS


கீவ்: உக்ரைனின் கீவ் நகரில், சாலையில் சென்று கொண்டிருந்த பொது மக்களின் கார் மீது ரஷிய படையினர் நடத்திய தாக்குதலில் இரண்டு பேர் பலியாகினர். 4 பேர் காயமடைந்தனர் என்று உக்ரைன் நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

உக்ரைன் மீது ரஷிய படைகள் நடத்தி வரும் போர் 11வது நாளை எட்டியுள்ள நிலையில், உக்ரைன் அதிகாரிகள் முகநூல் பக்கத்தில் இந்தத் தகவலை  தெரிவித்துள்ளனர்.

கீவ்வின் வோர்ஸெல் கிராமத்திலிருந்து 6 பேர் ஒரு காரில் வந்து கொண்டிருந்த போது, எதிரே வந்த ரஷியப் படையினர் இயந்திரத் துப்பாக்கியைக் கொண்டு தாக்குதல் நடத்தியதில், காரில் வந்த பெண் மற்றும் 17 வயது சிறுமி கொல்லப்பட்டனர். மேலும், 7 வயது குழந்தை உள்பட நான்கு பேர் காயமடைந்தனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வாக்காளர் இறுதிப் பட்டியல்! சென்னையில் 28.30 லட்சம் பேர்!

வாக்காளர் இறுதிப் பட்டியல்: புதுக்கோட்டையில் 12.98 லட்சம் பேர்!

வாக்காளர் இறுதிப் பட்டியல்: ஈரோட்டில் 17 லட்சத்து 40 ஆயிரம் பேர்!

மேற்கு வங்க அரசியல் சாணக்கியர் முகுல் ராய் காலமானார்!

ஏற்றத்தில் பங்குச்சந்தை! ஆட்டோ, வங்கிப் பங்குகள் உயர்வு!

SCROLL FOR NEXT