முகப்பு
உலகம்

உக்ரைன் போர்: இந்தியாவிற்கு நன்றி தெரிவித்த பாகிஸ்தான் மாணவி

உக்ரைனில் இந்திய அதிகாரிகள் மூலம் மீட்கப்பட்ட பாகிஸ்தான் மாணவி இந்தியத் தூதரகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

Updated On : 1 பிப்ரவரி, 2024 at 8:36 AM
மாணவி அஸ்மா ஷபிக்
பகிர்:

உக்ரைனில் இந்திய அதிகாரிகள் மூலம் மீட்கப்பட்ட பாகிஸ்தான் மாணவி இந்தியத் தூதரகத்திற்கு நன்றி தெரிவித்துள்ளார்.

உக்ரைனில் சிக்கியுள்ள இந்திய மாணவர்களை மீட்க இந்தியத் தூதரகம் தொடர் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது.

நேற்று(மார்ச்-8) நிலவரப்படி 75 சிறப்பு விமானங்கள் மூலம் உக்ரைனிலிருந்து 18,000 இந்தியர்கள் தாயகம் திரும்பியுள்ளனர்.

இந்நிலையில், ரஷியத் தாக்குதல் நடைபெற்று வரும் உக்ரைன் பகுதியிலிருந்து பாகிஸ்தானைச் சேர்ந்த அஸ்மா ஷபிக் என்கிற மாணவியை இந்திய தூதரக அதிகாரிகள் மீட்டுள்ளனர்.

இதுகுறித்து அம்மாணவி ‘மிகவும் இக்கட்டான சூழ்நிலையில் சிக்கித் தவித்த எங்களுக்கு எல்லா வழிகளிலும் ஆதரவளித்த கீவிலுள்ள இந்தியத் தூதரகத்திற்கும், இந்தியப் பிரதமருக்கும் நன்றி தெரிவிக்க விரும்புகிறேன். இந்தியத் தூதரகத்தால் நாங்கள் பாதுகாப்பாக வீடு திரும்புவோம் என்று நம்புகிறேன்’ தெரிவித்தார்.

மேலும், மீட்கப்பட்ட மாணவி உக்ரைனை விட்டு வெளியேறுவதற்காக மேற்கு உக்ரைன் பகுதிக்குச் செல்ல இருக்கிறார்.

முன்னதாக, இந்தியத் தூதரகம் வங்கதேசம் மற்றும் நேபாளத்தைச் சேர்ந்த 2 மாணவர்களை மீட்டது குறிப்பிடத்தக்கது. 

முழு கட்டுரையைப் படிக்க →